வளைகுடா செய்திகள்

சவூதி: மூன்று மாதமாக காணாமல் தேடப்பட்ட நபர் பாலைவனத்தில் தன்னந்தனியாக உயிரிழப்பு..!!

வளைகுடா நாடுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக பாலைவனத்திற்குள் செல்பவர்களில் ஒரு சிலர் பாலைவனத்தில் இருந்து வெளியேற முடியாமல் அங்கேயே இறக்கும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

தற்சமயம் சவூதி அரேபியாவில் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் தேடப்பட்டு வந்த ஒரு நபர் பாலைவனத்தின் நடுவில் தன்னந்தனியாக உயிரிழந்து கிடந்துள்ளார்.

அல் காசிம் பிராந்தியத்தின் அல் குவேய்யா பாலைவனப் பகுதியில் தற்செயலாக ஒட்டகம் மேய்க்க சென்றவர் இறந்த மனிதனின் உடலைக் கண்டறிந்ததாத சவூதியின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து ஒட்டகம் மேய்ப்பவர் உடனடியாக இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் ஆம்புலன்ஸ் உடன் போலீஸ் ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் அந்த உடலை பரிசோதித்த பின், ​​இறந்தவரின் உடல் ஜூன் 23, 2021 முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சவூதி நாட்டவர் என்று அடையாளம் காணப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

இறந்தவரின் சகோதரர் தான் இந்த உடலை முதலில் அடையாளம் காட்டியுள்ளார். இறந்த உடல் சிதைவடைந்த நிலையில் இல்லாததால், அவர் சமீபத்தில் தான் இறந்திருப்பார் என கூறப்படுகிறது.

மேலும் அவர் தனது சகோதரரின் பாக்கெட்டில் பணம் மற்றும் அடையாள ஆவணங்களைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதி தற்போழுது வரை பாலைவனமாகவே இருக்கின்றது. பல ஆண்டுகளாக, மீட்புப் பணியாளர்கள் பாலைவனத்தில் காணாமல் போனவர்களை மீட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஒரு சிலர் பாலைவனத்தில் பல நாட்கள் தன்னம்பிக்கையோடு இருந்து முரண்பாடுகளை முறியடித்து அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும், சவுதி அரேபியாவின் பாலைவனங்களில் 131 பேர் காணாமல் போயுள்ளனர். ரியாத்தில் உள்ள இன்கட் தேடுதல் மற்றும் மீட்புக் கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு பாலைவனத்தில் காணாமல் போனவர்களில் பசி மற்றும் தாகத்தால் 20 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 100 பேர் நல்ல ஆரோக்கியத்துடன் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 11 நபர்களைப் பற்றிய விவரங்கள் தற்போது வரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவியியல் ரீதியாக, ரியாத்தில் 41 பேரும், ஷர்கியாவில் 13 பேரும், நஜ்ரானில் 5 பேரும், ஆசிரில் 1 பேரும், மக்காவில் 2 பேரும், மதீனாவில் 3 பேரும், ஹாயிலில் 31, காசிமில் 31 பேரும், தபூக்கில் 11 பேரும், அல் ஜவ்வில் 3 பேரும் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் 11 பேரும் காணாமல் போயிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!