அமீரக செய்திகள்

UAE: தடுப்பூசி போடாத நபர்கள் இனி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதி..!! அபுதாபி வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் என்ன..??

அமீரகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றல் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மற்றுமொரு அறிவிப்பை அபுதாபி எமிரேட் வெளியிட்டுள்ளது.

அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு, 17 மார்ச், 2022 வியாழன் முதல் அமீரகத்தில் உள்ள நிகழ்வுகள், சுற்றுலா இடங்கள் மற்றும் கலாச்சார இடங்களுக்கு தடுப்பூசி போடாத பார்வையாளர்களுக்கான நுழைவுத் தேவையை புதுப்பித்துள்ளது.

மேற்கண்ட இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி போடாத நபர்கள் 48 மணி நேரத்திற்குள் எதிர்மறையான PCR சோதனையைப் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் கொரோனா தொற்றுநோயின் தற்போதைய மீட்புக் கட்டத்திற்கு ஏற்ப குறைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் இந்த பொது இடங்களை அணுக, அமீரகத்தின் அதிகாரப்பூர்வ தடுப்பூசி பதிவு மற்றும் PCR சோதனைப் பதிவான Alhosn செயலியில் கிரீன் பாஸை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!