அமீரக செய்திகள்

அமீரகத்தில் மற்ற எமிரேட்டில் இருந்து அபுதாபி நுழைய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் கட்டாயம்…!! புதிய விதி அமல்…!!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் பல முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைய பூஸ்டர் டோஸ் போட்டிருக்க வேண்டும் என்பது தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உங்களின் அனைத்து கொரோனா சோதனை முடிவுகளுக்கான அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செயலியான Al Hosn செயலி அதன் சமீபத்திய புதுப்பிப்பில், அபுதாபி மற்றும் அபுதாபியின் பெரும்பாலான பொது இடங்களுக்குள் நுழைய அனைத்து வகையான கொரோனா தடுப்பூசிகளுக்கும் பூஸ்டர் டோஸ் கட்டாயம் தேவை என்று கூறியுள்ளது.

அபுதாபி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் “அனைத்து வகையான தடுப்பூசிகளுக்கும் பூஸ்டர் டோஸ்கள் கட்டாயம் தேவை. அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸை தொடர்ந்து பராமரிக்க, தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை போட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டால், இப்போது உங்களுக்கான பூஸ்டர் டோஸிற்கு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளது.

மேலும் வைரஸ் அறிகுறிகளின் அபாயத்தைக் குறைப்பதற்காக, குறிப்பாக கடுமையாக நோய்வாய்ப்படுவதைக் குறைக்க, நாட்டில் உள்ள சுகாதார ஊழியர்கள், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஒருவர் இரண்டு டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு, ஒரு நபர் Pfizer-BioNTech ஐ பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொண்டாலும், கடைசியாக தடுப்பூசி போட்டுக்கொண்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டால், அந்த நபர் மற்றொரு பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்றும் அல் ஹோஸ்ன் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து “Alhosn செயலியில் பச்சை நிலையைப் பராமரிக்க, உங்கள் பூஸ்டர் டோஸை விரைவில் பதிவு செய்யவும் என தெரிவித்துள்ளது.

கடந்த வருட ஆகஸ்டில், அபுதாபி அரசாங்க ஊடக அலுவலகம், ஆறு மாதங்களுக்கு முன்னர் சினோஃபார்ம் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள் கண்டிப்பாக பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. 

பின் டிசம்பரில், தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து அமீரக குடியிருப்பாளர்களையும் கடைசி டோஸ் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸைப் போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தியது.

அல் ஹோஸ்ன் செயலியின் சமீபத்திய புதுப்பிப்பானது அபுதாபியில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை தெளிவுபடுத்துகிறது. கடந்த 14 நாட்களுக்குள் நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு, எதிர்மறையான PCR சோதனை முடிவு இருந்தால், அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் ‘கிரீன் பாஸ்’ செயல்படுத்தப்படும்.

முழுமையாக தடுப்பூசி போட, நீங்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். தடுப்பூசி நிலையைப் பராமரிக்க, நீங்கள் இரண்டாவது டோஸ் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் முன்னதாக எடுத்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஒரு பூஸ்டர் டோஸையும் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!