வளைகுடா செய்திகள்

குவைத்: இனி இந்தியா செல்ல பயணத்திற்கு முந்தைய PCR சோதனை தேவையில்லை..!! புதிய அறிவிப்பு வெளியீடு..!!

குவைத்தில் இருந்து இந்தியா பயணிப்பவர்கள் இனி பயணத்திற்கு முந்தைய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா பயணிக்க கொரோனா பரிசோதனை அறிக்கை இல்லாமல் தடுப்பூசி சான்றிதழ் மட்டுமே தேவைப்படும் நாடுகளின் பட்டியலில் குவைத் நாட்டை தற்பொழுது இந்தியா இணைத்துள்ளபடியால் இனி குவைத்தில் இருந்து இந்தியா திரும்புபவர்களுக்கு PCR சோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

இருப்பினும் இந்தியா பயணிப்பவர்கள் ஏர் சுவிதா போர்ட்டலில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை இணைத்து Self-declaration form எனும் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

PCR சோதனைக்கான தேவை நீக்கப்பட்டுள்ளதால் குவைத்தில் இருந்து இந்தியா பயணிக்கவுள்ளவர்கள் அரசின் இந்த அறிவிப்பால் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!