அமீரக செய்திகள்

மறைந்த அமீரக அதிபர் மாண்புமிகு ஃஷேக் கலீஃபாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..!! புகைப்பட தொகுப்பு..!!

மறைந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் உடல் அபுதாபியில் உள்ள அல் பதீன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக அமீரக அரசு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

அபுதாபியின் மகுட இளவரசர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், மறைந்த ஜனாதிபதியின் இறுதிச் சடங்குகளை அபுதாபியில் உள்ள ஷேக் சுல்தான் பின் சயீத் மசூதியில் மேற்கொண்டார்.

மறைந்த ஐக்கிய அரபு அமீரக தலைவரின் மறைவு அனைவருக்கும் பொறுமை மற்றும் ஆறுதலுடன் ஊக்கமளிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். அவருடன் அல் நஹ்யான் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் மதிப்பிற்குரிய ஷேக் முகமது மற்றும் அல் நஹ்யான் குடும்ப உறுப்பினர்கள் மறைந்த ஷேக் கலீஃபாவின் உடலை அபுதாபியில் உள்ள அல் பதீன் கல்லறையில் அவரது இறுதி இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அத்துடன் சனிக்கிழமையன்று, மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் அபுதாபியில் உள்ள முஷ்ரிஃப் அரண்மனையில் அமீரக ஆட்சியாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடமிருந்து இரங்கலைப் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக அதிபர் மரணமடைந்ததை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் இறுதி பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. அதில் 73வது வயதில் காலமான ஐக்கிய அரபு அமீரக அதிபருக்காக பிரார்த்தனைகளைக் கடைப்பிடிக்க குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஒன்று கூடியதும் குறிப்பிடத்தக்கது.

பிற புகைப்படங்கள்

Related Articles

Back to top button
error: Content is protected !!