தமிழக செய்திகள்வளைகுடா செய்திகள்
சவூதி: நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது..!
விமானத்தில் பயணித்த பெண்ணிடம், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து, சவுதி ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் சென்னையை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் பயணிக்கையில், சவுதியில் டாக்டராக பணிபுரியும் தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதான ஸ்ரீராம் என்பவர், அப்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதனை அடுத்து விமானப் பணிப்பெண்களிடமும், சென்னை விமான நிலைய போலீசிலும், அந்தப் பெண் புகார் அளித்தார். இருவரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர் விமான நிலைய போலீசார், பாலியல் தொல்லை செய்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனர்.