வளைகுடா செய்திகள்

GCC குடியிருப்பாளர்களுக்காக புதிய விசாவை அறிமுகப்படுத்தும் சவூதி அரேபியா.. சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கை..!!

சவூதி அரேபியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் GCC குடியிருப்பாளர்களுக்கு புதிய விசா திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சவூதியின் சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல் கதீபின் கூறுகையில், 2030 ஆம் ஆண்டில் $200 பில்லியன் வரை முதலீடு செய்து 100 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பை 10 சதவீதமாக அதிகப்படுத்துவதை VISION 2030 நோக்கமாகக் கொண்டுள்ளது.

“2019 மற்றும் தற்போது வரை வேலைத்துறை 15 சதவிதம் அதிகரித்து 820,000 வேலைகள் எட்டப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

2021 ஆம் ஆண்டில் சவூதியில் வசிப்பவர்களால் 64 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் 5 மில்லியனை எட்டியுள்ளது. மேலும் 2019 இல் தொடங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் சுற்றுலா வருபவர்களுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றும் அல் கதீப் தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோய்களின்போது சுற்றுலா துறையில் 40 சதவீதம் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி துறையின் பங்களிப்பை சுமார் 10 சதவீதம் இலக்காகக் எட்ட சவூதி திட்டமிட்டுள்ளதாகவும் அல் கதீப் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!