வளைகுடா செய்திகள்

குடியிருப்பாளர்களுக்கு 11 நாட்கள் ‘ஈத் அல் பித்ர்’ விடுமுறையை அறிவித்த வளைகுடா நாடு..!!

புனித ரமலான் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படும் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல் பித்ர் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் அனைத்து வளைகுடா நாடுகளும் ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களை அறிவித்து வருகின்றன. அதன் வரிசையில் தற்போது கத்தார் அரசும் மக்களுக்கு விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.

அதன்படி, கத்தார் நாட்டு குடியிருப்பாளர்கள இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு 11 நாட்கள் நீண்ட தொடர் விடுமுறையை அனுபவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறையானது அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கத்தார் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஈத் அல் பித்ர் விடுமுறையானது ஏப்ரல் 19, புதன்கிழமை அன்று தொடங்கி ஏப்ரல் 27, வியாழக்கிழமை வரை 9 நாட்கள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 28, வெள்ளிக்கிழமை மற்றும் ஏப்ரல் 29, சனிக்கிழமை கத்தாரில் வார விடுமுறை நாட்கள் என்பதால் இதனுடன் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் தொடர் விடுமுறையை கத்தாரில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனுபவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈத் அல் பித்ர் விடுமுறை முடிந்து ஏப்ரல் 30 அன்று ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கத்தார் மத்திய வங்கி (QCB), வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கீழ் செயல்படும் கிளைகளின் விடுமுறைக்கான தொடக்க மற்றும் முடிவு தேதிகளை கத்தார் மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!