அமீரக செய்திகள்

UAE: ஹீலியம் பலூனில் சவாரி செய்து 360 டிகிரியில் குளோபல் வில்லேஜை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அரிய வாய்ப்பு..!

துபாயின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான குளோபல் வில்லேஜ்-ன் 27 வது சீசன் அக்டோபர் 25-ஆம் தேதி துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்து குளோபல் வில்லேஜிற்கு பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தேவையான முழு ஏற்பாட்டையும் செய்துள்ளதாகவும் அதிகமானோர் அமர்வதற்கு கூடுதல் இருக்கைகளை அமைத்துள்ளதாகவும், இதற்கான நுழைவு டிக்கெட் 18 திர்ஹம்ஸில் இருந்து துவங்குகிறதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குளோபல் வில்லேஜ் சர்வதேச சுற்றுலா வாசிகளிடையே பிரபலமானதாகும்.  இது திறக்கப்பட்டதில் இருந்து 90 மில்லியன் பார்வையாளர்கள் வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குளோபல் வில்லேஜ்-ன் 27-வது சீசன் நடக்க இருப்பதால் பலவிதமான கண்கவர் நேரடி கச்சேரிகளுடன், உலகளாவிய கலைஞர்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த காத்துள்ளனர். அந்த் வகையில் குளோபல் வில்லேஜில் பிக் பலூனுக்கு என்று அழைப்படும் ஹீலியம் பலூன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது, இதில் 20 பேர் வரை பயணிக்க முடியும். இந்த ஹீலியம் பலூன், ஆறு அடுக்குகளுடன், 65 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து கண்கவர் குளோபல் வில்லேஜ் முழுவதையும் 360 டிகிரிகளில் கண்டுகளிக்கும் வாய்ப்பை பார்வையாளர்கள் பெறலாம்.

இது தொடர்பாக குளோபல் வில்லேஜ் வணிக மேம்பாட்டு இயக்குநர் நவீன் ஜெயின் கூறியதாவது: “ஒவ்வொரு சீசனிலும் பார்வையாளர்களுக்கு புதிய மற்றும் அற்புதமான இடங்கள் அனுபவிப்பதை உறுதிசெய்கிறோம். பலூன் சவாரி அனுபவம் பலரின் பக்கெட் பட்டியலில் உள்ளது, எனவே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

மேலும் பார்வையாளர்களுக்கு பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஞாயிறு முதல் வியாழன் வரை செல்லுபடியாகும் டிக்கெட்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ANY DAY’ டிக்கெட் என துவங்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் பொது விடுமுறை நாட்கள் உட்பட, அனைத்து நாட்களிலும் குளோபல் வில்லேஜ்க்குள் செல்லும் வாய்ப்பை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இதனை மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அதன் விலை 18 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!