வளைகுடா செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்களுக்கு 60 நாள் இலவச நுழைவு விசா வழங்கும் ஓமன்..!

ஹய்யா கார்டு வைத்திருக்கும் கத்தார் 2022 FIFA உலகக் கோப்பை ரசிகர்களுக்கு ஓமன் 60 நாள் நுழைவு விசாவை இலவசமாக வழங்கவதாக சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது. ஹய்யா அட்டை என்பது உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொள்ள தேவையான தனிப்பயனாக்கப்பட்ட ரசிகர்கள் ஐடி. உலகம் முழுவதிலுமிருந்து வரும் கால்பந்து ரசிகர்களை வரவேற்கும் ஒரு பகுதியாக, நுழைவு விசாவை ஒமன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் துணைச் செயலாளரும், திட்ட வழிகாட்டல் குழுவின் தலைவருமான அஸ்ஸான் காசிம் அல் புசைடி கூறுகையில், “உலகக் கோப்பை ரசிகர்களைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முக்கிய நகரமாக மஸ்கட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மஸ்கட் மற்றும் தோஹா இடையே தினசரி ஷட்டில் விமானங்கள் இயக்கப்படும் போது, ​​ஹய்யா கார்டு வைத்திருப்பவர்களுக்கு 60 நாள் பல நுழைவு விசா இலவசமாக வழங்கப்படும். இருப்பினும் ஓமனில் தங்கியிருக்கும் போது அவர்கள் விசா வகையை மாற்றலாம்” என்று அல் புசைடி கூறினார்.

ஹய்யா கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் விசா மூலம் ஓமானுக்குச் செல்ல விரும்பும் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.  கால்பந்து போட்டிக்கான விமானச் சலுகைகள் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் அனுபவிக்கமுடியும்.

பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் பல்வேறு அரசு மற்றும் தனியார் பிரிவுகள் உள்ளன, அதாவது கலாச்சார அமைச்சகம், விளையாட்டு மற்றும் இளைஞர்கள், ராயல் ஓமன் போலீஸ, ஓமன் சுற்றுலா வளர்ச்சி நிறுவனம், ஓமன் ஏர் மற்றும் ஓமன் விமான நிலையம் ஆகியவற்றின்  கூட்டு குழுவால் இந்த திட்டம் நடத்தப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!