அமீரக குடியிருப்பாளர்களே உஷார்.. சமூக வலைதளத்தில் போலி அபுதாபி பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா கணக்கு..!

அபுதாபி பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா என்ற பெயரில் போலி கணக்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் துவங்கப்பட்டுள்ளதை மக்கள் புறக்காணிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அபுதாபி பிக் டிக்கெட் குழு தெரிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ (@bigticketauh) இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், @bigtiicketauh” என்ற போலி கணக்கை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போலி கணக்கு என்று பதிவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகள் நாட்டில் மோசடி செய்பவர்களை பலமுறை எச்சரித்துள்ளனர். பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாகுபவர்களின் பணத்தை திருடுவதை நோக்கமாக கொண்டு பலர் சமூக வலைதளத்தில் போலி பக்கங்களை திறந்து வருகின்றனர்.
முன்னதாக தொடக்கத்தில், அரசு சேவைகளை வாங்கி தருதாகக் கூறி போலி கணக்கு ஒன்று சமூக வலைதளத்தில் திறக்கப்பட்டதற்கு காவல்துறை பொதுமக்களை எச்சரித்தது. இந்த மோசடியில், குடியிருப்பு தேவைகள், வாகன உரிம ஆவணங்கள், பள்ளி சேர்க்கைகள் போன்ற துறையில் பணி கிடைப்பதாக நினைத்து பல குடியிருப்பாளர்கள் பணத்தை இழந்துள்ளனர்.
இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற சமூக ஊடக கணக்குகளுடன் தொடர்புகொள்வது மற்றும் ஆன்லைனில் அல்லது தொலைபேசியில் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கு எதிராக காவல்துறை தொடர்ந்து விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.