அமீரக செய்திகள்

ஈத் அல் அதாவை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்..!! எத்தனை நாட்கள்..??

அமீரகத்தில் வரவிருக்கும் ஈத் அல் அதாவை முன்னிட்டு துபாயில் பொது பார்க்கிங் இலவசமாக கிடைக்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. ஆனால், இது மல்டி லெவல் பார்க்கிங் பகுதிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இலவச பார்க்கிங் ஜூன் 27 செவ்வாய் முதல் ஜூன் 30 புதன் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் மீண்டும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் வரும் ஜூன் 27 செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 30 வெள்ளி வரை (இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின்படி துல் ஹஜ் 9 முதல் 12 வரை) விடுமுறை இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு வருவதால் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கு ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 6 நாட்கள் விடுமுறையைப் பெறும் ஊழியர்கள் ஜூலை 3, திங்கட்கிழமை பணிக்குத் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!