அமீரக செய்திகள்
அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை வெளியிட்ட அமீரகம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தினை ஒப்பிடுகையில் அக்டோபர் மாதத்தில் விலையானது சற்று உயர்த்தப்பட்டுள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:
- சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.55 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் அக்டோபர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.60 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
- ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.44 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் அக்டோபர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.49 திர்ஹமாக சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
- டீசல் : செப்டம்பர் மாதத்தில் 2.38 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் அக்டோபர் மாதம் முதல் லிட்டருக்கு 2.51 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது.