அமீரக செய்திகள்

அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் 6 வகையான ‘non-work residency’ விசா!! முழுவிபரங்களும் இங்கே…

தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், மாணவர்கள் வேலை தேடுபவர்கள் என ஏராளமான வெளிநாட்டவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை புரிகின்றனர். தற்போது, அமீரகத்தில் 9.06 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வசிக்கின்றனர்.

தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள திறமையாளர்கள் மற்றும் நிபுணர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அமீரக அரசாங்கம் பல விசா விருப்பங்களை வழங்கி வருகின்றது. அவற்றில் சில வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதி இல்லாமல் நாட்டிற்குள் வசிக்க அனுமதிக்கிறது.

மேலும், அனைத்து பணி அனுமதி அல்லாத ரெசிடென்சி விசா வகைகளும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் புதுப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த ஆறு வகையான ரெசிடென்சி விசாக்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கபபட்டுள்ளது:

1. ரிமோட் ஒர்க் விசா (Remote work visa):

இந்த விசா வைத்திருப்பவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் எந்த நாட்டில் அமைந்திருந்தாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கொண்டே வேலை செய்ய முடியும். மேலும், அவர்கள் தங்கள் சொந்த ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் நாட்டில் தங்கலாம் மற்றும் விசாவில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வேலை செய்யலாம்.

விசா காலம்: 1 ஆண்டு

தேவையான ஆவணங்கள்:

  • குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
  • அமீரக கவரேஜ் வேலிடிட்டியுடன் சுகாதார காப்பீடு (medical insurance).

தொழிலாளர்கள்:

ஒரு வருடம் செல்லுபடியாகும் ஒப்பந்தம் கொண்ட தற்போதைய முதலாளியிடமிருந்து வேலைக்கான சான்று, மாதத்திற்கு குறைந்தபட்சம் $3,500 சம்பளம், கடந்த மாத ஊதியம் மற்றும் முந்தைய 3 மாதங்களின் வங்கி அறிக்கைகள்.

வணிக உரிமையாளர்கள்:

  1. ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு நிறுவனத்தின் உரிமைக்கான சான்று, நீட்டிப்புக்கு உட்பட்டது, சராசரி மாத வருமானம் $3,500 மாதத்திற்கு அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் முந்தைய 3 மாதங்களின் வங்கி அறிக்கைகள்.
  2. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தொலைதூரத்தில் வேலை செய்து கொண்டிருப்பதற்கான (remote work) சான்று.
  3. குடும்ப உறுப்பினர்களுக்கான அனுமதிக்கு விண்ணப்பித்தால், விண்ணப்பதாரர்கள் தங்களின் செல்லுபடியாகும் சுகாதார காப்பீடு மற்றும் பாஸ்போர்ட்டுடன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

  • குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் – துபாய் (GDRFAD) போர்ட்டலில் உள்நுழையவும்.
  • ஒரு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கவும்.
  • ‘கோல்டன் விசா’ என்று பெயரிடப்பட்ட சேவையைத் தேர்வு செய்யவும்.
  • தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, அடுத்தடுத்த கட்டணங்களைச் செலுத்தவும்.

அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் (ICP) விதிமுறைகளின்படி பணி விசா இல்லாத விண்ணப்பங்களை அவர்களின் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்: https://icp.gov.ae 

2. ரிட்டயர்மென்ட் விசா (Retirement visa):

ஓய்வு பெற்ற வெளிநாட்டவர்கள் அமீரகத்தின் 5 வருட நீண்ட கால விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

துபாயில் ஓய்வு பெறும் விசாவிற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி:

  1. ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் அல்லது வெளியில் 15 ஆண்டுகளுக்கு குறையாமல் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது ஓய்வுபெறும் போது 55 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
  2. 1 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு குறையாத சொத்துகளை வைத்திருக்க வேண்டும் அல்லது 1 மில்லியனுக்குக் குறையாத நிதிச் சேமிப்பு அல்லது 20,000 திர்ஹம்ஸ் மாத வருமானம் இருக்க வேண்டும்
  3. விசா 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், மேலும் தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அதை புதுப்பிக்கலாம்.

அபுதாபியில் ரிட்டயர்மென்ட் விசாவிற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:

  • நிலையான டெப்பாசிட் (fixed deposit): குறைந்தபட்சம் 1,000,000 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயங்களில் வைப்புத் தொகையைக் காட்டும் மற்றும் இரண்டு (2) ஆண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு டெபாசிட் இருக்கும் என்று அமீரகம் அல்லது வெளியே செயல்பட உரிமம் பெற்ற வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கை.
  • ரியல் எஸ்டேட்டுக்கு: முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) அல்லது அமீரக ரியல் எஸ்டேட் பதிவுக்கு பொறுப்பான மற்ற தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட ரியல் எஸ்டேட் யூனிட் மதிப்பு சான்றிதழ், சொத்து எந்த நீதித்துறை அதிகாரியாலும் பறிமுதல் செய்யப்படவில்லை மற்றும் குறைந்தபட்சம் 1,000,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள சொத்து என்பதை நிரூபிக்க வேண்டும்.
  • ஆண்டு வருமானத்திற்கு: ஆண்டு வருமானம் 240,000 திர்ஹம்ஸ் அல்லது பிற நாணயங்களில் அதற்கு சமமானதை நிரூபிக்கும் வங்கி அறிக்கை.

விண்ணப்பிக்கும் வழி:

  • ICPயின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: https://icp.gov.ae
  • GDRFA அல்லது  DLD மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

3. மாணவர் விசா:

திறமையான மற்றும் அனைத்து தரத்திலும் உயர் சாதனை படைத்த மாணவர்கள் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, 95% அல்லது அதற்கு மேற்பட்ட இறுதி தரத்துடன் பொது அல்லது தனியார் மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெறும் மாணவர்கள் அல்லது தனித்துவமான அமீரகம் அல்லது சர்வதேச பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட GPA-வில் குறைந்தபட்சம் 3.75 மதிப்பை வைத்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்தாண்டு படிப்பு விசாவிற்கு தகுதி பெறுகிறார்கள். மேலும், நீங்கள் ஒரு அதிசிறந்த மாணவராக இருந்தால், 10 வருட வதிவிட விசாவிற்கு தகுதி பெறலாம்.

 

விண்ணப்பிக்கும் முறை:

அமீரகத்திற்கு வெளியே உள்ள மாணவர்கள் மாணவர்ரெசிடென்சி விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். GCC குடிமக்களுக்கு விசா தேவையில்லை. பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் விவகார அலுவலகங்கள் மாணவர்களுக்கு அவர்களின் விசாவிற்கு உதவுவதற்கான செயல்முறையை எளிதாக்கும். அதாவது, விசாவைச் செயலாக்குவதற்குத் தேவையான செயல்லாடுகள், அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ சேர்க்கை கடிதம், மருத்துவ உடற்தகுதி சோதனை, விசா ஸ்பான்சர் (அது பல்கலைக்கழகமாக இருக்கலாம் அல்லது வசிக்கும் உறவினராக இருக்கலாம்) மற்றும் GDRFAஇன் ஒப்புதல் ஆகியவை இதில் அடங்கும்.

4. வேலை தேடுவோருக்கான விசா (Jobseeker visa)

அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு ஹோஸ்ட்/ஸ்பான்சர் தேவையில்லாமல் வேலை தேடுவதற்கு விசிட் விசா வழங்கப்படுகிறது. வேலை தேடுபவர்கள் 60, 90 அல்லது 120 நாட்கள் செல்லுபடியாகும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இருந்தபோதிலும் இந்தியாவில் IIT-யில் படித்தவர்களே இந்த விசாவை பெற தகுதியுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாவைப் பெற பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள்:

  • மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் (MOHRE) வேலைகளின் தொழில்முறை நிலைகளின் படி, வேலை தேடுபவர் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது திறன் மட்டத்தில் இருக்க வேண்டும், அல்லது
  • கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வகைப்பாட்டின் படி உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரி மற்றும் கடந்த 2 ஆண்டுகளுக்குள் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • குறிப்பாக,  பரிந்துரைக்கப்பட்ட நிதி உத்தரவாதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • ஒரு வண்ண புகைப்படம்
  • விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டின் நகல்
  • தகுதிச் சான்றிதழ் (சான்றளிக்கப்பட்டது)

5. க்ரீன் விசா:

இந்த விசா உங்களை சொந்த ஸ்பான்சர்ஷிப்பில் ஐந்தாண்டுகளுக்கு நாட்டில் தங்க அனுமதிக்கும். இது மிகவும் திறமையான வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் சிறந்த மாணவர்களை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசா வைத்திருப்பவர்கள் தங்கள் மகன்களுக்கு மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு 25 வயது வரை செய்யலாம். அதுமட்டுமில்லாமல், குடியிருப்பு அனுமதி ரத்து செய்யப்பட்ட பிறகு அல்லது காலாவதியான பிறகு, 6 ​​மாதங்கள் வரை நாட்டில் தங்குவதற்கு விசா நீண்ட நெகிழ்வான சலுகைக் காலங்களை வழங்குகிறது.

6. கோல்டன் விசா:

உலகம் முழுவதிலும் உள்ள முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை ஈர்க்கும் நோக்கில் அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. அமீரகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் அதிகபட்ச காலவரையறையில் எந்த வரம்பும் இல்லாமல் கோல்டன் ரெசிடென்ஸ் செல்லுபடியாகும்.

இந்த கோல்டன் ரெசிடென்சி திட்டம் புதுப்பிக்கத்தக்கது மற்றும் குறைந்தபட்சம் 2 மில்லியன் திர்ஹம் முதலீடு கொண்ட முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், சிறந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் திறமையான மாணவர்கள் மற்றும் முதல் பட்டப்படிப்பு வரையிலான குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கான குடியிருப்பு அனுமதிகள் வழங்கப்படுகின்றன. ஸ்பான்சர் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான வயது வரம்பு 18லிருந்து 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, திருமணமாகாத மகள்களுக்கு வயது வரம்பு இல்லை. மேலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் குடியிருப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!