அமீரக செய்திகள்

குடியிருப்பாளர்கள் காவல் நிலையம் செல்லாமலே துபாய் போலீஸின் 6 சேவைகளை அணுகலாம்..!! எப்படினு தெரியுமா.?

துபாய் காவல்துறையால் தொடங்கப்பட்ட ‘on-the-go’ முன்முயற்சியானது, சிறிய கார் விபத்து அல்லது குற்றத்தைப் புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய தேவையை நீக்கி அருகிலுள்ள சேவை நிலையங்களில் புகார் செய்ய அனுமதிக்கிறது.

துபாயில் உள்ள ENOC, ADNOC மற்றும் Emarat போன்ற எரிபொருள் விநியோக நிறுவனங்களுடனான துபாய் காவல்துறையின் ஒத்துழைப்பு மூலம், குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறிய போக்குவரத்து விபத்துக்கள் முதல் தெரியாத நபர் ஏற்படுத்தும் விபத்து வரை காவல் நிலையங்களுக்கு நேரில் செல்லாமல் சேவை நிலையங்களில் விரைவாகவும் எளிதாகவும் புகாரளிக்க முடியும்.

இந்த கூட்டாண்மையின் படி, சேவை நிலையங்களில் உள்ள ஊழியர்கள், காவல்நிலையத்திற்கு செல்லாமலேயே சிறிய விபத்துகள் மற்றும் தெரியாத நபர் ஏற்படுத்திய விபத்துகளைப் புகாரளிக்க குடியிருப்பாளர்களுக்கு உதவுவார்கள். இது விபத்துகளுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்வதற்காக வாகன ஓட்டிகளின் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது.

எமிரேட் முழுவதிலும் உள்ள 138 சேவை நிலையங்களில் செயல்படும் இந்த ‘ஆன்-தி-கோ’ முன்முயற்சி பல்வேறு சேவைகளை வழங்குகிறது:

  • வாகன பழுதுபார்க்கும் சேவை
  • அறியப்படாத விபத்து அறிக்கை
  • எளிய விபத்து அறிக்கை
  • போலீஸ் ஐ
  • இ-க்ரைம்
  • தொலைத்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட (Lost and found)

இது தவிர, வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையத்தில் அறிக்கையைப் பெற்ற பிறகு, தங்கள் காரை சரிசெய்து கொள்ளும் சேவையும் வழங்கப்படுகிறது. அதாவது, எமிரேட் குடியிருப்பாளர்களுக்கு ஒரு புதிய எக்ஸ்பிரஸ் சேவையை வழங்குவதற்காக ENOC நிலையங்களில் உள்ள கார் பழுதுபார்க்கும் கடையான ஆட்டோப்ரோவுடன் (Autopro) துபாய் காவல்துறை இணைந்துள்ளது.

அதன்படி, வாகன ஓட்டிகள் Enoc நிலையத்தில் சிறிய விபத்து அறிக்கையைப் பெற்ற பிறகு, ஆட்டோப்ரோ கடைக்குச் செல்ல வேண்டும். பின்னர் சேதமடைந்த வாகனம் அங்கீகரிக்கப்பட்ட பணிமனைக்கு கொண்டு செல்லப்படும். பழுதுபார்க்கப்பட்ட பிறகு, வாகனம் ஓட்டுநரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், மூத்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற குடியிருப்பாளர்கள் இந்த புதிய சேவையை இலவசமாகப் பெறலாம். மற்ற ஓட்டுநர்கள் 150 திர்ஹம்ஸ் கட்டணத்தில் சேவையிலிருந்து பயனடையலாம்.

அதேபோல், வாகன ஓட்டிகள் தொலைந்த/கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை துபாய் போலீஸ் ஸ்மார்ட் ஆப் மூலமாகவும், அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்றோ அல்லது ஸ்மார்ட் காவல் நிலையத்திலோ (SPS) புகாரைத் தெரிவிக்கலாம். இந்த ஸ்மார்ட் சிஸ்டம் பொருளைக் கண்காணிக்கும் நேரத்தையும் முயற்சியையும் குறைக்க உதவும்.

கூடுதலாக, தனிநபர்கள் அல்லது சொத்துக்களை பாதிக்கும் சைபர் கிரைம்களைப் புகாரளிக்க இ-கிரைம் சுய சேவை அனுமதிக்கிறது. செயல்முறையை சீரமைக்க, குடியிருப்பாளர்கள் அல்லது பார்வையாளர்கள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்யலாம், முடிந்தவரை தகவல்களை வழங்கலாம். மேலும்,  இ- க்ரைம்களை துபாய் போலீஸ் செயலி, இணையதளம் (www.dubaipolice.gov.ae) அல்லது பல்வேறு ஸ்மார்ட் காவல் நிலையங்களிலும் (SPS) புகாரளிக்கலாம்.

இதற்கிடையில், போலீஸ் ஐ சேவை பொது பாதுகாப்பு மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக குற்றங்களைப் புகாரளிக்க குடியிருப்பாளர்களை அனுமதிக்கிறது. இந்த சேவை ஆறு மொழிகளில் கிடைக்கிறது மற்றும் துபாய் போலீஸ் ஆப் மற்றும் இணையதளம் மூலமாகவும் குற்றங்களை புகாரளிக்கலாம்.

அதேபோன்று துபாய் போலீஸ் செயலியில் கிடைக்கும் போலீஸ் ஐ பிளாட்ஃபார்ம் மூலம், குடியிருப்பாளர்கள் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள், போக்குவரத்து சம்பவங்கள் குறித்து உடனடி நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் உடனடியாக புகார் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!