அமீரக செய்திகள்

ஜூலை மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை வெளியிட்ட அமீரகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2023ம் ஆண்டின் ஜூலை மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. இந்த மாதம் எரிபொருள் விலையானது முன்னர் இருந்த விலையை விட குறைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை மாதம் எரிபொருள் விலையானது சற்று உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் குழுவின் ஜூலை மாத விலைப்பட்டியலின் படி, ஜூலை 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஜூன் மாதத்தில் 2.95 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.89 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஜூன் மாதம் 2.84 திர்ஹம்சாக இருந்தது.

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.81 திர்ஹம்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2.76 திர்ஹம்சாக ஜூன் மாதத்தில் இருந்தது.

அதே சமயம் ஜூன் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.68 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது ஜூலை மாத விலை பட்டியலில் 2.76 திர்ஹம்சாக உயர்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!