அமீரக செய்திகள்

துபாயின் பார்க்கிங் மண்டலங்களில் உள்ள குறியீடுகளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? இத தெரிஞ்சுக்கோங்க முதல்ல…

துபாயில் பணம் செலுத்தி வாகனத்தை பார்க்கிங் செய்ய விரும்புபவர்கள் பார்க்கிங் மண்டலத்தைச் சுற்றியுள்ள சைன்போர்டுகளில் உள்ள பார்க்கிங் குறியீட்டை எவ்வாறு புரிந்து கொள்வது, வாகனத்தை நிறுத்த பார்க்கிங் கட்டணம் எவ்வளவு மற்றும் பார்க்கிங் மண்டலம் எப்போது இலவசம் போன்ற விவரங்களை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இன்னும் சொல்லப் போனால், குடியிருப்பாளர்கள் வைத்திருக்கும் சீசனல் பார்க்கிங் கார்டு வேலை செய்யாத சில மண்டலங்கள் கூட துபாயின் சில பகுதிகளில் இருக்கலாம். அப்படியான சூழலில், துபாயில் கட்டண பார்க்கிங் பகுதிகளில் உள்ள அடையாளங்களை புரிந்து கொண்டு எப்படி பார்க்கிங் கட்டணம் செலுத்துவது என்பதற்கான எளிமையான வழிகாட்டிகளை கீழே படித்து தெரிந்துகொள்ளலாம்.

பார்க்கிங் அடையாளங்களில் காணப்படும் எழுத்துக்கள்:

நீங்கள் துபாயில் வாகனத்தை பார்க்கிங் செய்யும்போது, கட்டண பார்க்கிங் மண்டலத்தில் இருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய முதலில் அங்கிருக்கும் சைன்போர்டைத் தேட வேண்டும். அங்கு பார்க்கிங் மண்டல எண் மற்றும் குறியீட்டுடன் நீலம் மற்றும் ஆரஞ்சு நிற அடையாளம் காணப்பட்டால், அது கட்டண பார்க்கிங் மண்டலம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

அத்துடன் நீங்கள் காணும் மூன்று இலக்க எண், அதைத் தொடர்ந்து ஒரு எழுத்து மற்றும் ஒரு பிரத்யேக பார்க்கிங் குறியீடு (எடுத்துக்காட்டாக 232C.) என இருந்தால் அது எந்த விஷயங்களை தீர்மானிக்கிறது என்பதை பின்வரும் தகவல்களை படித்து நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

துபாயில் உள்ள கட்டண பார்க்கிங் மண்டலங்கள்:

A மற்றும் B என்ற பார்க்கிங் குறியீடுகளைக் கொண்டுள்ள மண்டலங்கள் வணிகப் பகுதிகளைக் குறிக்கும். அடுத்ததாக C மற்றும் D என்ற பார்க்கிங் குறியீடுகள் காணப்பட்டால், அவை வணிகம் அல்லாத அல்லது குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள பார்க்கிங் மண்டலம் என்பதை குறிக்கும்.

RTA இன் கால் சென்டர் – 800 9090 படி, சீசனல் பார்க்கிங் கார்டுகள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள A, B, C மற்றும் D ஆகிய பகுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். மற்ற பார்க்கிங் மண்டலங்கள் எழுத்துக்கள் அல்லது குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. அவை F, G, H, I, J மற்றும் K ஆகும்.

1.குறியீடு A:

இந்த குறியீட்டைக் கொண்டுள்ள பார்க்கிங் மண்டலங்கள் அனைத்தும் வணிகப் பகுதிகளில் காணப்படும் சாலையோர பார்க்கிங் ஆகும். இந்த பகுதிகளில் குறுகிய பார்க்கிங் நேரம் உள்ளது மற்றும் ஒரு டிக்கெட்டுக்கு அதிகபட்சம் நான்கு மணிநேரம் மட்டுமே காரை நிறுத்த அனுமதிக்கும்.

பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • 30 நிமிடங்களுக்கு 2 திர்ஹம்
  • ஒரு மணிநேரத்திற்கு 4 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 12 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 16 திர்ஹம்

பார்க்கிங் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை)

2.குறியீடு B:

இது வணிகப் பகுதிகளில் உள்ள பார்க்கிங் மண்டலங்களுக்கானது, இங்கு ஒரு டிக்கெட்டுக்கு 24 மணிநேரம் வரை வாகனத்தை பார்க்கிங் செய்ய அனுமதி உண்டு.

பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • ஒரு மணி நேரத்திற்கு 3 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 6 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 12 திர்ஹம்
  • ஐந்து மணிநேரத்திற்கு 15 திர்ஹம்
  • 24 மணிநேரத்திற்கு 20 திர்ஹம்

பார்க்கிங் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை)

3.குறியீடு C:

இந்த குறியீடு கொண்ட சைன்போர்டுகள் வணிகம் சாராத பகுதிகள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் சாலையோரத்தில் வாகனம் நிறுத்துவதற்காகும். இந்த மண்டலம் அதிகபட்சமாக நான்கு மணி நேரம் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கும்.

பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • ஒரு மணிநேரத்திற்கு 2 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 5 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 11 திர்ஹம்

பார்க்கிங் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை)

4.குறியீடு D:

ஒரு டிக்கெட்டுக்கு 24 மணிநேரம் வரை பார்க்கிங் செய்ய அனுமதிக்கும் இந்த மண்டலமானது, குடியிருப்பு அல்லாத இடங்களில் வாகனத்தை நிறுத்த இந்த குறியீட்டைக் கொண்டிருக்கும்.

பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • ஒரு மணிநேரத்திற்கு 2 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 4 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 5 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 7 திர்ஹம்
  • 24 மணிநேரத்திற்கு 10 திர்ஹம்

பார்க்கிங் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை)

5.குறியீடு F:

தி நாலெட்ஜ் பார்க், துபாய் மீடியா சிட்டி மற்றும் துபாய் இன்டர்நெட் சிட்டி போன்றவை அடங்கிய DECOM பகுதிக்கு உட்பட்ட பார்க்கிங் மண்டலங்களாகும்.

பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 5 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 11 திர்ஹம்

பார்க்கிங் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை)

6.குறியீடு G:

டவுன்டவுன் துபாய், மராசி பே பகுதி மற்றும் துபாய் ஹெல்த் கேர் சிட்டி (DHCC) ஆகிய இடங்களில் இருக்கும் பார்க்கிங் மண்டலங்களை இந்த குறியீடு குறிக்கும்.

பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • ஒரு மணிநேரத்திற்கு 4 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 12 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 16 திர்ஹம்

பார்க்கிங் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை)

7.குறியீடு H:

துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் பகுதியில் இருக்கும் பார்க்கிங் மண்டலங்களுக்கு இந்த குறியீடாகும். மேலும் இங்கு குறைந்தபட்ச பார்க்கிங் வசதியும் உள்ளது.

பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • 30 நிமிடங்களுக்கு 2 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 12 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 16 திர்ஹம்

பார்க்கிங் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை)

8.குறியீடுகள் I, J மற்றும் K:

ஜுமைரா லேக் டவர்ஸ் பகுதியில் அமைந்துள்ள பார்க்கிங் மண்டலங்கள்.

பார்க்கிங் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை)

குறியீடு I பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • ஒரு மணி நேரத்திற்கு 10 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 20 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 30 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 40 திர்ஹம்

குறியீடு J பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • 30 நிமிடங்களுக்கு 2 திர்ஹம்
  • ஒரு மணிநேரத்திற்கு 4 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 12 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 22 திர்ஹம்

குறியீடு K பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

  • 30 நிமிடங்களுக்கு 2 திர்ஹம்
  • ஒரு மணிநேரத்திற்கு 4 திர்ஹம்
  • இரண்டு மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
  • மூன்று மணிநேரத்திற்கு 12 திர்ஹம்
  • நான்கு மணிநேரத்திற்கு 16 திர்ஹம்
  • ஐந்து மணிநேரத்திற்கு 20 திர்ஹம்
  • ஆறு மணிநேரத்திற்கு 24 திர்ஹம்
  • ஏழு மணிநேரத்திற்கு 28 திர்ஹம்
  • எட்டு முதல் 24 மணிநேரத்திற்கு 32 திர்ஹம்

9.அடுக்கு மாடி பார்க்கிங் வசதி:

துபாயில் இருக்கும் அடுக்கு மாடி பார்க்கிங் இடங்கள் 24/7 என பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கூட செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பார்க்கிங் இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மதிப்பு கூட்டப்பட்ட வரியுடன் (VAT) சேர்த்து 5 திர்ஹம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

எனினும், ரமலான் மாதத்தின் போது துபாயில் உள்ள பார்க்கிங் மண்டலங்களில் கட்டண பார்க்கிங் நேரங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!