வளைகுடா செய்திகள்

கழிவறைக்கு அருகில் ரமலான் உணவுகளை பதப்படுத்திய உணவு கிடங்கு..!! இழுத்து மூடிய ஜித்தா முனிசிபாலிட்டி…!!

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் உள்ள உம் அல்-சலாமில் உணவை பதப்படுத்துவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட கட்டிடத்தில் 40 டன் ரமலான் உணவை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அழித்துள்ளனர். நாடு முழுவதும் வணிக மற்றும் சுகாதார நிறுவனங்களில் தரங்களைக் கண்காணித்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஜித்தா முனிசிபாலிட்டி தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, பேஸ்ட்ரிகள் மற்றும் இனிப்புகளை தயாரிக்கவும் சேமிக்கவும் ஒரு கிடங்காக பயன்படுத்தப்படும் அல்-மஹமீத் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை ஆய்வுக் குழு சோதனை செய்ததாகவும் முனிசிபாலிட்டி கூறியுள்ளது. அங்கு கழிவறைகளுக்கு அருகில் உணவு பதப்படுத்தப்பட்டதையும், தவறான உணவு சேமிப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதையும் மற்றும் காலாவதியான பொருட்களையும் முனிசிபாலிட்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் மோசமான சுகாதாரத்தின் விளைவாக பூச்சிகள் கிடந்த கெட்டுப்போன உணவுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் உடனடியாக அவற்றை அழித்தது மட்டுமின்றி, அந்த இடத்தை மூடுவதற்கான சட்ட நடவடிக்கைகளையும் முனிசிபாலிட்டி அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உணவு சேமிப்புக் கிடங்குகளில் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளைப் பின்தொடர்வதற்காக மற்ற கிடங்குகளில் ஆய்வுச் சுற்றுப்பயணங்களை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. அதேசமயம், Baladi என்ற ஆப், ஒருங்கிணைந்த மையம் அல்லது 940 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் இது போன்ற மீறல்களைப் புகாரளித்து சேவைகளை மேம்படுத்துவதில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பிற்கும் முனிசிபாலிட்டி பாராட்டு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!