வளைகுடா செய்திகள்

குவைத்: வெளிநாட்டவர்களின் டிரைவிங் லைசன்ஸ் செல்லுபடியை ஒரு வருடமாக குறைத்த உள்துறை அமைச்சகம்!!

குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் டிரைவிங் லைசன்ஸ் செல்லுபடி காலத்தை, இந்த வார தொடக்கத்தில் மூன்று ஆண்டுகளில் இருந்து ஒரு வருடமாக குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் குறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவைத் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக ஒரு வருடத்திற்கு மட்டுமே ஆன்லைனில் தங்களின் லைசென்ஸை புதுப்பிக்க முடியும். ஆனால், நாட்டிற்குள் டொமெஸ்டிக் ஒர்க்கர் என அழைக்கப்படும் வீட்டு டிரைவர்களாக பணிபுரியும் வெளிநாட்டவர்களின் டிரைவிங் லைசன்ஸ் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்த சில வெளிநாட்டவர்கள் தங்களின் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து, அதன் மூலம் தங்களின் தொழிலை (profession) மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்தே இந்த புதிய நடவடிக்கை குவைத்தின் உள்துறை அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் டிரைவிங் லைசன்ஸ் 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்றும், பின்னர் அது குடியிருப்புடன் இணைக்கப்பட்டு ஓராண்டாக குறைக்கப்பட்டததாகவும் கூறப்படுகிறது. எனினும் கடந்த ஏப்ரல் 25, 2023 வரை வெளிநாட்டவர்களின் ஓட்டுநர் உரிமம் 3 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், “ஏப்ரல் 22 முதல் 28 வரை 263 பெரிய விபத்துகளையும், 961 சிறு விபத்துக்களையும் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணியாளர்கள் கையாண்டுள்ளனர். அதே காலப்பகுதியில் 34,848 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டன, 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன மற்றும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 76 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, நீங்கள் குவைத்தில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், வெளிநாட்டில் ஒரு தனியார் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு, நீங்கள் சந்திக்க வேண்டிய சில நிபந்தனைகளை தெரிந்து வைத்திருப்பதும் அவசியம். அவற்றை கீழே காணலாம்.

  • குவைத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக சட்டப்பூர்வ ரெசிடென்சி இருக்க வேண்டும்.
  • பல்கலைக்கழக பட்டதாரியாக இருக்க வேண்டும் மற்றும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குவைத் நாணயத்தில் 600 தினார்க்கு குறையாத சம்பளத்தைப் பெறுபவராக இருக்க வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!