வளைகுடா செய்திகள்

முகத்தைக் காட்டினாலே போதும்… போர்டிங் பாஸ் தேவையில்லை..!! பயணிகளின் வசதிக்காக சவூதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சேவை…

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் (Riyadh) உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் (King Khalid International Airport) ‘Smart Travel Journey’ என்பதன் அடிப்படையில் பயணிகளுக்கான ஸ்கிரீனிங்கை செயல்படுத்த உள்ளதாக ரியாத் ஏர்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் அமைப்பின் மூலம் பயணிகள் போர்டிங் பாஸ் இல்லாமல் அவர்களது முகப் பதிவு மூலம் அடையாளம் காணப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, பயணிகளின் இந்த முகப் பதிவு அவர்களது போர்டிங் பாஸாக மாறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், SITA ஸ்மார்ட் பாத் சொல்யூஷன் (SITA Smart Path solution) திறமையான பயோமெட்ரிக் பதிவை செயல்படுத்துகின்ற நிலையில், பயணிகள் SITA FacePodஇன் கேமராவைப் பார்ப்பதன் மூலம் உள் நுழையலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் SITA முகப்பதிவு முறை, சுமார் 20 சதவிகிதம் போர்டிங் நேரத்தைக் குறைப்பதாகவும், விமான நிலையத்தில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, SITA நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட் சேவை ரியாத் விமான நிலையத்தை ஸ்மார்ட் விமான நிலையமாக மாற்றி அதிகபட்ச பயணிகளின் திருப்தியை எட்ட ஒரு முக்கியமான முயற்சியாகக் கருதப்படுவதாகவும் விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரியாத் ஏர்போர்ட்ஸ் நிறுவனம், விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் (domestic terminal) எண். 5 இல் ஸ்மார்ட் ஷாப்பிங் கார்ட்களுக்கான சோதனைச் சேவையை முன்கூட்டியே அறிமுகம் செய்துள்ளது என்றும் இதன் மூலம் விமான பயணிகளுக்கு இது போன்ற புதிய சேவையை வழங்கும் நாட்டின் முதல் விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!