வளைகுடா செய்திகள்

அதிவெப்பமான சாலைகளை குளிர்விக்க புதிய தொழில்நுட்பம்.. சோதனை கட்டத்தை துவங்கிய சவூதி அரேபியா..!!

சவூதி அரேபியாவின் சாலைகளுக்கான பொது ஆணையம் (General Authority for Roads – GAR), கோடை காலத்தில் சாலைகளில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை சமாளிக்க புதிய குளிரூட்டும் முறையைப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, “Cooling Asphalt Surfaces” என்று அழைக்கப்படும் சோதனையின் செயல்பாடு ஆராய்ச்சி ஆய்வின் அடிப்படையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் சாலைகள் பகல் நேரத்தில் பல சமயங்களில் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டுவதாகவும் இதன் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பகலில் உள்ள வெப்பத்தை உறிஞ்சும் சாலைகள் இரவு நேரங்களில் இந்த வெப்பத்தை மீண்டும் வெளியிடுவதால், காற்று மாசுபாட்டை அதிகரிப்பதாக சவுதி பிரஸ் ஏஜென்சி நடத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவியல் நிகழ்வு வெப்ப தீவு என்று அழைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளே வெப்பத் தீவுகளாக (heat island) மாறுகின்றன, ஏனெனில் காடுகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற இயற்கை நிலப்பரப்புகளை விட கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு போன்ற கட்டமைப்புகள் சூரியனின் வெப்பத்தை உறிஞ்சி மீண்டும் வெளியிடுகின்றன.

ஆகவே, இது போன்ற நகரமயமாக்கப்பட்ட பகுதிகள் வெளிப்பகுதிகளை விட அதிகளவிலான வெப்பநிலையை அனுபவிப்பத்தைத் தவிர்ப்பதற்காக குளிர் நடைபாதைகளைப் பயன்படுத்துவதற்கு சோதனைகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளன. அவை சிறிய அளவிலான சூரிய கதிர்வீச்சை உறிஞ்சும் திறன் கொண்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், குறைந்த வெப்பத்தை வெளியேற்றுவதன் மூலம் மேற்பரப்பு வெப்பநிலையின் அளவை குறைக்கும் என கூறப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பெருநகரங்களில் காத்திருக்கும் பகுதிகள் மற்றும் குடியிருப்பு மண்டலங்களில் நடைபயிற்சி பகுதிகள் உள்ளிட்ட குடியிருப்பு சாலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது ரியாத்தில் இரண்டு முக்கிய இடங்களில் சோதிக்கப்பட்டது, மற்றும் முடிவுகள் அதன் வெற்றியை நிரூபித்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்புப் பகுதிகளில் வெப்பநிலையைக் குறைப்பதும், கட்டிடங்களை குளிர்விக்கப் பயன்படும் ஆற்றலைக் குறைப்பதும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதும் இந்தச் சோதனையின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சாலைப் பயனீட்டாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் ஆராய்ச்சி மற்றும் நடைமுறை சோதனைகளை மேம்படுத்துவதில் GAR செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!