அமீரக செய்திகள்

உங்கள் மொபைலிற்கு வரும் தேவையற்ற விளம்பர SMS-ஐ தவிர்க்க விருப்பமா?? நீங்கள் செய்ய வேண்டிய எளிய வழிமுறை உள்ளே..!!

மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் எரிச்சலை உண்டுபண்ணும் ஒரு விஷயமாக மொபைலிற்கு வரும் விளம்பர செய்தி இருக்கின்றது. நேரம், காலம் எதுவும் இன்றி தேவையற்ற நேரங்களில் நமது மொபைலுக்கு வரும் இந்த விளம்பர மெசேஜினை பலரும் விரும்புவதே இல்லை. இந்த SMS நீங்கள் உபயோகப்படுத்தும் மொபைல் ஆபரேட்டரிடம் இருந்தோ அல்லது நீங்கள் ஏதேனும் பொருட்கள் வாங்கிய கடையிலிருந்தோ அல்லது உங்கள் மொபைல் எண்ணை தெரிவித்திருக்கும் ஏதேனும் நிறுவனத்திடம் இருந்தோ தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இந்த விளம்பர செய்திகள் பெரும்பாலும் தேவையற்றதாகவும் நமக்கு பலன் இல்லாததாகவே இருக்கும். இது போன்ற மெசேஜ் உங்கள் மொபைல் போனிற்கு வருவதை நீங்கள் விரும்பவில்லையா? இதனை தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா என தேடுபவர்களா நீங்கள்?? உங்களுக்காகவே ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecommunications Regulatory Authority) ஒரு சேவையை உருவாக்கியுள்ளது.

TRA வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைத் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்கும் மொபைல் போன் விளம்பர செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, எடிசலாட் மற்றும் டூ ஆகிய உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களின் ஒத்துழைப்புடன் SMS வழியாக விளம்பரங்களைத் தடுக்க ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பர செய்திகள் உங்கள் மொபைல் போனிற்கு வருவதை தவிர்ப்பதற்காக நீங்கள் 7726 என்ற எண்ணிற்கு “Ball” என டைப் செய்து ஒரு SMS அனுப்பினால் போதும். உங்கள் மொபைலிற்கு “AD-“ என ஆரம்பித்து வரும் அனைத்து விளம்பர SMS-களையும் மொபைல் ஆபரேட்டர் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து TRA தெரிவிக்கையில், “மொபைல் போன்கள் வழியாக விரும்பத்தகாத விளம்பர செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சியின் முதல் கட்டம் இது. இந்த முயற்சியை செயல்படுத்திய உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!