அமீரக செய்திகள்

UAE: திர்ஹம்ஸிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை தீவிரமாக உற்று நோக்கும் NRI-கள்..!

அமீரக திர்ஹம்ஸிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றத் தாழ்வுகளை சந்துத்து வரும் நிலையில் இன்று நடக்க இருக்கும் வங்கிக் கூட்டத்திற்கு முன்னதாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கட்டத்தில் திர்ஹம்ஸுக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 21.44 ரூபாய் என்ற அளவை தொட்டது. பின்னர் 21.53 ஆக சரிந்து இப்போது 21.62 ஆக உள்ளது. அமீரகத்தில் கடந்த மாதம் தான் இந்திய ரூபாய் திர்ஹமுக்கு 21.79 என்ற மிகக் குறைந்த அளவில் இருந்தது.

கடந்த 48 மணிநேரங்களில் ரூபாய் மதிப்பில் மாற்றங்கள் காணப்பப்பட்டன. இந்திய ரிசர்வ் வங்கி கூட்டம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு ஆகியவை ரூபாயின் குறுகிய கால வாய்ப்புகளுக்கான போக்கை நிர்ணியிக்கும். மொத்தத்தில், மத்திய வங்கி 21 திர்ஹம்ஸுக்கு மேல் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை என்பதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. ரிசர்வ் வங்கி ஏப்ரல் முதல் வட்டி விகிதங்களை 1.30 சதவீதம் உயர்த்தியுள்ளது.

ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கம் காணப்படும் நிலையில், பணம் அனுப்பும் அளவு குறைந்துள்ளது. ஆனால் இப்போதைய வீழ்ச்சியால், அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் ரூபாயின் மதிப்பு 21 க்கு மேல் இருந்தால் நல்லது என நினைப்பதாக LuLu Exchange இன் செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும் 21.50 திர்ஹம்ஸ் என்னும் மதிப்பு நிலைகளில், பணம் அனுப்பும் விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!