அமீரக செய்திகள்

UAE: எமிரேட்ஸ் ஐடியில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா..? குடியிருப்பாளர்களுக்கு ஃபெடரல் ஆணையம் கூறுவது என்ன..?

எமிரேட்ஸ் அடையாள அட்டையில் உள்ள தரவுகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், மாற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையத்திற்கு (ICA) தெரிவிக்க வேண்டும் என்று அமீரகத்தின் டிஜிட்டல் துறை தெளிவுபடுத்தியுள்ளது. அடையாள அட்டை மற்றும் மக்கள்தொகை பதிவு அமைப்பில் உள்ள தரவை FAIC புதுப்பிக்க அனுமதிப்பதாக அமீரக டிஜிட்டல் துறை அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் எமிரேட்ஸ் அடையாள அட்டை கட்டாயமாகும், அடையாள அட்டையைப் பெறுவதில் அல்லது புதுப்பிப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அதிகாரிகளின் கூற்றுப்படி, குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் ICA இணையதளம் அல்லது அதன் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் ஏற்கனவே உள்ள மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டை தொடர்பான எந்த விவரங்களையும் மாற்ற அல்லது புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். மாற்றங்களைச் செய்வதற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை, ஆனால் அதன் சேவைக்கு 50 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும்.

அமீரகத்தின் குடியிருப்பு விசாவை நாட்டை விட்டு வெளியேறும் நோக்கத்திற்காகவோ அல்லது வேலைகளை மாற்றுவதற்காகவோ தங்கள் அடையாள அட்டைகளை குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்திடம் ஒப்படைக்க வேண்டும். குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம், திரும்பப் பெற்ற அடையாள அட்டையை அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!