வளைகுடா செய்திகள்

சவூதி: ஏப்ரல் மாதத்தில் பெய்த ஆலங்கட்டி மழை..!! பனிக்கட்டிகளை கையில் ஏந்தி குடியிருப்பாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவல்..!!

சவூதி அரேபியாவில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இந்த அற்புதமான வானிலை நிகழ்வைக் கண்ட குடியிருப்பாளர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேறி தனது கைகளில் ஆலங்கட்டியை எடுத்து விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

சவூதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்குவதும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

பொதுவாகவே வளைகுடா நாடுகளை பொறுத்தவரை குளிர்காலம் என்பது பிப்ரவரி மாதத்துடன் முடிந்து மார்ச் மாதத்தில் இருந்து குளிர் குறைந்து வெயில் மெதுவாக ஆரம்பிக்கும். அதிலும் ஜூலை முதல் செப்டம்பர் வரை வளைகுடா நாடுகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

இந்த நிலையில் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் வரையிலுமே அனைத்து வளைகுடா நாடுகளும் தற்பொழுது வரை மழையை அனுபவித்து வருகின்றன. முக்கியமாக சவூதி அரேபியா, குவைத், ஓமான், அமீரகம் போன்றவை சில சமயங்களில் தீவிர மழையையும் ஒரு சில நேரங்களில் ஆலங்கட்டி மழையையும் சந்தித்து வருகின்றன.

இந்த நிகழ்வானது வளைகுடா நாடுகளில் வசித்து வரும் குடியிருப்பாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது. அதிலும் அமீரகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் கிளவுட் சீடிங் (cloud seeding) முறை பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!