அமீரக செய்திகள்

உலகளவில் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகள் முதலிடம்..!! முன்னணி வகிக்கும் அமீரகம், கத்தார், பஹ்ரைன்..!!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் முன்னணியாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இருப்பதாக யுனெஸ்கோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் வணிகத்திற்காக மத்திய கிழக்கு நாடுகள் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்று நடத்தப்பட்ட ஆய்வில், சமூக ஊடகங்களின் பயன்பாடு மத்திய கிழக்கு முழுவதும் பரவலாக உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தளங்களை எடுத்துக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் MENA பகுதி முன்னணியில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் சமூக ஊடக பயன்பாடு:

>> சமீபத்திய ஆய்வில், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் உலகளவில் முதல் 10 இடங்களில் ஐந்து MENA நாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகியவை உலகிலேயே அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவதாகக் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

>> இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல, YouTube ஐ அணுகும் நாடுகளில் லெபனான் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து பஹ்ரைன், ஓமான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாட்கள் உள்ளன.

>> இதுபோலவே, டிக்டாக் பயன்பாட்டிலும் முதல் ஐந்து இடங்களில் மத்திய கிழக்கு நாடுகளே (ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈராக்) உள்ளன. ஸ்நாப்சேட் செயலியும் அப்படித்தான். ஸ்னாப்சாட்டைப் பயன்படுத்தும் உலகின் முதல் 16 நாடுகளில் ஒன்பது நாடுகள் MENAவில் உள்ளன.

>> உலகளவில் மிக பிரபலமான சமூக ஊடகமான ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடாக லிபியா விளங்குகிறது. 13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 96.1 சதவீதம் பேர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால், ஃபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்துவதில் லிபியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

>> மேலும், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் அதிக அணுகலைக் கொண்ட முதல் 20 நாடுகளில் நான்கு MENA நாடுகளைக் காணலாம், துருக்கி இப்போது Instagram இன் ஐந்தாவது பெரிய சந்தையாக உள்ளது, உலகளவில், கிட்டத்தட்ட 49 மில்லியன் பயனர்கள் உள்ளனர். அதேசமயம், Twitter க்கான முதல் 20 சந்தைகளில் MENA இல் உள்ள மூன்று நாடுகள் இடம் பிடித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!