அமீரக செய்திகள்

பார்வையாளர்களுக்கு இலவச நுழைவை அறிவித்துள்ள எக்ஸ்போ சிட்டி துபாய்..!! சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு சலுகை…!!

ஒவ்வொரு ஆண்டும் மே.18 அன்று சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்படுகிறது. இதில் எக்ஸ்போ சிட்டி துபாயானது சர்வதேச அருங்காட்சியக தினத்தை கொண்டாடும் வகையில், அருங்காட்சியக தினத்திற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை மே 19ஆம் தேதி அன்று, அங்குள்ள அனைத்து முதன்மை பெவிலியன்களையும் பார்வையாளர்கள் இலவசமாக அணுகலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எக்ஸ்போ சிட்டியின் சலுகையில் அலிஃப் – தி மொபிலிட்டி பெவிலியன், டெர்ரா – தி சஸ்டைனபிலிட்டி பெவிலியன், தி வுமன்ஸ் அண்ட் விஷன் பெவிலியன்கள் அத்துடன் நேஷன்ஸ் பெவிலியன்கள் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் ஏஜென்சி மற்றும் அபுதாபியுடன் இணைந்து காலநிலையை மையமாகக் கொண்ட திரைப்படங்களை டெர்ரா காட்சிப்படுத்தும் என்றும், அத்துடன் கதை சொல்லும் அமர்வுகள், நேரடி தியேட்டர் ஒர்க்‌ஷாப்ஸ் மற்றும் விளையாட்டு அடிப்படையிலான கற்றலுக்கான ‘டிங்கர் டேபிள்’ உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுபோலவே, அலிஃப் பெவிலியனில் மோட்டார்கள், சென்சார்கள் மற்றும் பொறியியலின் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் அனைத்து வயதினரும்தி வுமன்ஸ் அண்ட் விஷன் பெவிலியன்களில் கைவினை நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!