அமீரக செய்திகள்

துபாய் பயணிகளின் கவனத்திற்கு: துணை தூதரகம், விமான நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) வடக்கு ஓடுபாதை மே 9 முதல் ஜூன் 22 வரை விரிவான மேம்படுத்தல் பணிகள் காரணமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது துபாய் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறவிப்பை வெளியிட்டுள்ளது.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த தகவலை மேற்கோள் காட்டி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு துபாய் பயணிகளின் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்படும் என்பதை பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளது

முன்னதாக இன்று, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ட்வீட்டில், “துபாயில் வடக்கு ஓடுபாதை மூடல் காரணமாக சில விமானங்கள் துபாய் விமான நிலையத்திற்கு பதிலாக அல் மக்தூம் துபாய் (DWC) விமான நிலையம் மற்றும் ஷார்ஜா விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், 2022 மே & ஜூன் மாதங்களின் விமான செயல்பாடுகளில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய அட்டவணைக்கு, http://blog.airindiaexpress.in ஐப் பார்வையிடவும்.” என தெரிவித்துள்ளது

இணைக்கப்பட்ட அறிவிப்பில், “நீங்கள் துபாயிலிருந்து/துபாயிலிருந்து விமானங்களை முன்பதிவு செய்திருந்தால்… உங்கள் பயணத்தை மறுபதிவு செய்து உறுதிசெய்ய எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு குழு/நகர அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளவும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த அறிவிப்பை இந்திய துணை தூதரகம் பகிர்ந்து பயணிகள் தங்களின் பயணம் குறித்த தகவல்களை கவனத்துடன் தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!