அமீரக செய்திகள்

UAE: புதிய கட்டண பார்க்கிங் ஜோன்களில் வாகனங்களை நிறுத்த 2 திர்ஹம்ஸ்.. குடிமக்களுக்கு இலவசம்.. காரணம் என்ன..?

ஷார்ஜாவின் கோர்ஃபக்கனில் ஆகஸ்ட் 15 முதல் புதிய கட்டண பார்க்கிங் ஜோன்கள் அமைக்க இருப்பதாக கோர்ஃபக்கான் நகராட்சி அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை தவிர, காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கார்னிச் தெரு, ஷீஸ் பார்க் மற்றும் அல் ரஃபிசா அணையில் உள்ள கட்டண பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திக்கொள்ளலாம்.

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஷார்ஜா குடிமக்கள் வாகன நிறுத்துமிடங்களை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கு, மூத்த குடிமக்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது.

  • எமிரேட்ஸ் ஐடி
  • காரின் உரிமைச் சான்று
  • வாகன பதிவு சான்று

இந்த ஆவணங்களை கோர்ஃபக்கான் நகராட்சி இணையதளம் www.khormun.gov.ae வழியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் அல்லது கோர்ஃபக்கனில் உள்ள அல் முடிஃபி பகுதியில் உள்ள தலைமையகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!