அமீரக செய்திகள்

ஒரு சில நிமிடங்களிலேயே துபாய் டிரைவிங் லைசன்ஸை புதுப்பிப்பது எப்படி..?? படிப்படியான விளக்க செயல்முறை..!!

துபாயில் வசிக்கும் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டுமானால் அதற்காக பெரிதாக அலைய தேவையில்லை. முதலில் நீங்கள் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) ஓட்டுநர் உரிமங்களுக்கான கண் பரிசோதனைகளை நடத்தும் அருகிலுள்ள ஆப்டிகல் கடைக்குச் சென்று பரிசோதனைகளை முடித்ததும், வெகு சில நிமிடங்களிலேயே உங்கள் மொபைலில் விரைவாக விண்ணப்பித்து லைசன்ஸை நேரடியாக உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யலாம். ஆனால், அதற்கு உங்களது UAE PASS மற்றும் RTA ஆகியவற்றின் ஆன்லைன் அக்கவுண்டை சரியாக வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு கணக்குகளையும் உங்கள் ஸ்மார்ட்போனில் எளிதில் அமைக்கலாம்.

RTA-வில் உங்கள் அக்கவுண்டை பதிவு செய்யும் முறை:

உங்களிடம் ஏற்கெனவே RTA அக்கவுண்ட் இல்லையெனில் கீழ்க்கண்ட படிகள் மூலம் நீங்கள் செயல்முறையை முடிக்கலாம்.

  • RTA அப்ளிகேஷனை பதிவிறக்கி முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Login/Register’ என்பதைக் கிளிக் செய்து UAEPASS மூலம் உள்நுழையவும்.
  • உங்கள் UAE PASS மற்றும் RTA அக்கவுண்ட் இணைக்கப்படவில்லை எனில், உங்கள் UAE PASS மற்றும் RTA கணக்கை இணைப்பதற்கான பாப்-அப் நோடிஃபிகேஷனை பெறுவீர்கள். உங்களிடம் RTA அக்கவுண்ட் இல்லையென்றால் ‘Register’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு, முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி, தேசியம் மற்றும் மொபைல் போன்ற உங்களின் விவரங்கள் UAEPASS மூலம் தானாக உள்ளிடப்படும். ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விவரங்களைச் சரிபார்த்து பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கினால் போதும்.
  • அடுத்து, உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிடவும். இந்த இரண்டு கணக்குகளையும் நீங்கள் அமைத்தவுடன், புதுப்பித்தல் செயல்முறையை நீங்கள் தொடங்கலாம்.

படி 1: கண் பரிசோதனையை செய்யவும்:

RTA ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கண் பரிசோதனைகளை மேற்கொள்ளும் உங்களுக்கு அருகிலுள்ள ஆப்டிக்கல் கடைக்குச் சென்று, பின்வரும் ஆவணங்களுடன் பரிசோதனையை முடிக்க வேண்டும் :

  • அசல் UAE டிரைவிங் லைசன்ஸ்
  • அசல் எமிரேட்ஸ் ஐடி

உங்களிடம் அசல் ஆவணங்கள் இல்லையென்றால், இந்த இரண்டு ஆவணங்களின் டிஜிட்டல் பதிப்புகளையும் கடை ஏற்றுக்கொள்கிறதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.

செலவு: தோராயமாக 140 திர்ஹம்கள் செலவாகும். ஆனால் இது சேவை வழங்குநரின் அடிப்படையில் சிறிது மாறுபடலாம்.

உங்கள் கண் பரிசோதனைக்கு பணம் செலுத்தியவுடன், ஆப்டிகல் நிபுணர் உங்கள் சோதனை முடிவுடன் RTA அமைப்பில் புதுப்பிப்பார். அதன்பின் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும், இப்போது உங்கள் லைசென்ஸை புதுப்பிக்க தொடரலாம்.

படி 2: RTA Dubai ஆப் மூலம் லைசென்ஸை புதுப்பித்தல்
1. RTA Dubai அப்ளகேஷனில் நுழைந்து ,  ‘apply for renewing a driving licence’ என்பதைக் கிளிக் செய்ததும் உங்கள் ட்ராஃபிக் கோப்பு (Traffic File) தொடர்பான பின்வரும் விவரங்களைக் காண்பீர்கள்:
  • உரிம எண்
  • வெளியீட்டு தேதி
  • போக்குவரத்து குறியீடு எண்
  • உங்கள் பிறந்த தேதி
2. ‘next’ என்பதை கிளிக் செய்ததும், உங்கள் உரிமத்தில் ஏதேனும் பிளாக் பாயிண்டுகள் உள்ளதா இல்லையா என்பதன் சுருக்கம் மற்றும் உங்கள் கண் பரிசோதனை முடிவுகள் உங்களுக்கு வழங்கப்படும். மீண்டும் ‘next’ என்பதைத் கிளிக் செய்ய வேண்டும்.
3. அதில் டெலிவரி முறையைத் தேர்ந்தெடுக்கவும்:
  • கியோஸ்க் – அப்ளிகேஷனானது கியோஸ்க் மைய இருப்பிடங்களுடன் அதற்கான லொகேஷனை உங்களுக்கு வழங்கும்.
  • சேகரிப்பு (Collection) – உங்கள் டிரைவிங் லைசென்ஸை நீங்கள் சேகரிக்கக்கூடிய இடங்களுக்கான லொகேஷன் விபரங்களை அப்ளிகேஷன் உங்களுக்கு வழங்கும்.
  • கூரியர் – இந்த விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் முகவரி விவரங்களை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.
  • eDocument – உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.
4. கட்டணம் செலுத்துதல்: – புதுப்பித்தல் சேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • ஒரு வருடத்திற்கும் மேலாக ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் – 300 திர்ஹம்.
  • Knowledge and Innovation கட்டணம் – 20 திர்ஹம்.
  • கூரியர் கட்டணங்கள், பொருந்தினால். நீங்கள் Apple Pay, உங்கள் DubaiNow கணக்கு அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
படி 3: ஓட்டுநர் உரிமத்தைப் பெறுதல்
கடைசியாக, மேலே உள்ள செயல்முறையை நீங்கள் முடித்ததும், உங்கள் ஓட்டுநர் உரிமம் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டவுடன், மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் RTA இலிருந்து உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். முழு செயல்முறையும் முடிக்க 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!