வளைகுடா செய்திகள்

ஹஜ் 2024: வழிபாட்டாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட விதிகளை வெளியிட்டுள்ள சவுதி அரேபியா..!!

சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் 2024 ஆம் ஆண்டில் ஹஜ் செய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை அறிவித்துள்ளது, இதில் புனித பயணம் மேற்கொள்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பல புதிய தேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகங்கள், சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து, அனைத்து வழிபாட்டாளர்களும் Nusk தளம் மூலம் ஹஜ் அனுமதியை (Nusk platform) பெற வேண்டும் என்றும், இது அவர்களின் சட்டபூர்வமான புனித பயணத்திற்கு முக்கியமானது என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்பொழுது தடுப்பூசி நிலையை சரிபார்க்க Sehaty ஆப் மூலம் பதிவு செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஹஜ்- பயணத்திற்கான முக்கிய நிபந்தனைகள்:

• தேவையான தடுப்பூசிகளை உறுதிப்படுத்த Sehaty அப்ளிகேஷனில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

• சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் COVID-19 தடுப்பூசி, காய்ச்சல் தடுப்பூசி (influenza vaccine) மற்றும் மூளைக்காய்ச்சல் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும்.

• வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் Neisseria meningitidis தடுப்பூசி அவர்கள் வருவதற்கு முன் குறைந்தது 10 நாட்கள் முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் அவர்களின் சொந்த நாட்டிலிருந்து சான்றிதழ் மூலம் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து வழிபாட்டாளர்களுக்கும் பொதுவான நிபந்தனைகள்:

  • துல் ஹிஜ்ஜா 1445 (Dhu Al Hijjah 1445) ஜூன் 7, 2024 இறுதிக்குள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 12 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • கோவிட்-19, பருவகால காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம்.
  • வழிபாட்டாளர்கள் எந்த தொற்று நோய்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சுகாதாரச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஹஜ் நடைமுறைகளை சுமுகமாக நடத்துவதற்கும், வழிபாட்டாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நிறைவான அனுபவத்தை உறுதிசெய்வதை இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!