அமீரக செய்திகள்

ஈத் அல் அதா விடுமுறைக்கு துபாய், ஷார்ஜாவில் பூங்கா, பொழுதுபோக்கு இடங்களின் செயல்படும் நேரம் மாற்றியமைப்பு..!!

துபாயில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஈத் அல் அதா விடுமுறையை அனுபவிக்கும் வகையில், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கான புதிய வேலை நேரத்தை துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

அதேசமயம், ஈத் விடுமுறையின் போது அல் மம்சார் பீச் பார்க்கில் ‘Ladies’ Days’ எனப்படும் பெண்களுக்கான நாட்கள் ரத்து செய்யப்படும் என்றும் குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, ஜூலை 9 ஆம் தேதி வரை Summer Rush பொழுதுபோக்கு நிகழ்வின் இரண்டாவது சீசனை அனைத்து குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் விடுமுறையை அனுபவித்து மகிழலாம்.

துபாயில் மாற்றியமைக்கப்பட்ட நேரம்:

ஏரிகள் மற்றும் குடியிருப்புப் பூங்காக்கள்: காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும்.

பூங்காக்கள்: அல் முஷ்ரிப், அல் மம்சார், அல் சஃபா, அல் கோர், ஜபீல் ஆகிய பூங்காக்கள் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

அல் முஷ்ரிஃப் நேஷனல் பார்க்கில் மவுண்டன் பைக் டிராக் மற்றும் ஹைக்கிங் டிரெயில்: சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை செயல்படும்.

துபாய் ஃபிரேம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

தி சில்ட்ரென்ஸ் சிட்டி: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

குரானிக் பூங்கா: காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

தி கேவ் ஆஃப் மிராக்கிள்ஸ் அண்ட் க்ளாஸ் ஹவுஸ்(The Cave of Miracles and Glass House): காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

ஷார்ஜா:

துபாயைப் போலவே, ஷார்ஜா முனிசிபாலிட்டியும் ஈத் அல் அதா விடுமுறை நாட்களில் நகர பூங்காக்களுக்கான புதிய நேரத்தை அறிவித்துள்ளது. ஷார்ஜா முனிசிபாலிட்டியின் ட்விட்டர் பதிவின் படி, புதிதாக திருத்தப்பட்டுள்ள திறப்பு நேரம் ஜூன் 27 முதல் 30 வரை பொருந்தும்.

அதன்படி, ஷார்ஜா தேசிய பூங்கா மற்றும் ரோல்லா பூங்கா ஆகியவை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். மற்ற அனைத்து பூங்காக்களும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

மேலும், ஈத் அல் அதாவின் முதல் நாளில் இருந்து 3 ஆம் நாள் வரை நகரம் முழுவதும் பொது பார்க்கிங் இடங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஷார்ஜா நகராட்சி அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!