அமீரக செய்திகள்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து துபாயை புகைப்படம் எடுத்த விண்வெளி வீரர்..!! சமூக வலைதளங்களில் வைரல்..!!

ISS என்று சொல்லக்கூடிய சர்வதேச விண்வெளி நிலையம் சமீபத்தில் துபாய்க்கு மேலே சென்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ISS இல் இருக்கக்கூடிய ஒரு விண்வெளி வீரர், இரவு வானில் பிரகாசமாக ஜொலிக்கும் துபாயின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் பிரகாசமான தெரு விளக்குகள் துபாய் எமிரேட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே தெளிவான எல்லைகளைக் காட்டுகின்றன. மேலும் இருண்ட கடலுக்கு மத்தியில் கம்பீரமாக பாம் ஜூமேரா ஐலேண்டானது தனித்து தெரிகின்றது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சியின் விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா என்பவர் இந்த வான்வழி படத்தைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், “நாங்கள் இப்போதுதான் துபாய்க்கு மேலே பறந்தோம். ISS இலிருந்து துபாய் நகரத்தின் கண்கவர் இரவுக் காட்சி! உங்களால் பாம் ஐலேண்டைக் கண்டறிய முடிகிறதா?” என குறிப்பிட்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அத்துடன் உலகக் கோப்பையை நடத்தும் நாடான கத்தாரின் புகைப்படத்தையும் கத்தாருக்கு மேலே சென்ற போது எடுத்து வகாட்டா பகிர்ந்துள்ளார்.

வகாடா விண்வெளயில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் புகைப்படங்களைப் பகிர்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரே இந்த ஆண்டு அக்டோபரில், பாம் ஜூமேரா மற்றும் வேர்ல்ட் ஐலேண்ட் மற்றும் அபுதாபி நகரங்களைக் காட்டும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!