அமீரக செய்திகள்

துபாய் RTA அறிவித்துள்ள ‘செல்ஃப் டிரைவிங் சேலஞ்ச் சீசன் 3’..!! – 2 மில்லியன் டாலர் பரிசுத் தொகையும் அறிவிப்பு..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) செல்ஃப் டிரைவிங் டிரான்ஸ்போர்ட் 2023க்கான துபாய் வேர்ல்ட் சேலஞ்சின் மூன்றாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கான கள சோதனைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மூன்றாவது பதிப்பின் தீம் ‘Self-Driving Buses’ என்பதாகும்.

மேலும், இந்த சோதனைகள் துபாய் ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலங்கள் ஆணையத்தின் (Dubai Integrated Economic Zones Authority – DIEZ) உறுப்பினரான துபாய் சிலிக்கான் ஒயாசிஸில் (DSO) நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துள்ளது.

அத்துடன் செப்டம்பர் 26 முதல் 27 வரை RTAஆல் ஏற்பாடு செய்யப்பட்ட செல்ஃப் டிரைவிங் போக்குவரத்துக்கான 3வது துபாய் உலக மாநாட்டின் போது, செல்ஃப் டிரைவிங் சேலஞ்சில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

அதேவேளை, இந்த மாநாட்டில் சுமார் 60 கண்காட்சியாளர்களையும் 2000 பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், செல்ஃப் டிரைவிங் போக்குவரத்தைக் காண்பிக்கும் ஒரு கண்காட்சியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆட்டோனமஸ் டெக்னலாஜியில் உள்ள நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும், மிகச் சமீபத்திய வளர்ச்சிகள் மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்கவும் பல கலந்துரையாடல் பேனல்கள் மற்றும் ஒர்க் ஷாப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செல்ஃப் டிரைவிங் சேலஞ்சிற்கு சுமார் 2.3 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ள RTA, 2 மில்லியன் டாலர் பரிசை தொழில்துறை தலைவர்களுக்கும் (Industry Leaders), 300,000 டாலர்களை உள்ளூர் கல்வித்துறை பிரிவுக்கும் (Local Academia) வழங்குகிறது என்று பப்ளிக் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சியின் CEO, துபாய் வேர்ல்ட் சேலஞ்ச் ஃபார் செல்ஃப் டிரைவிங் டிரான்ஸ்போர்ட்டின் தலைவருமான அஹ்மத் பஹ்ரோஸ்யான் கூறியுள்ளார்.

 

அதன்படி, தன்னாட்சி தொழில்நுட்ப (autonomous technology) ஆராய்ச்சி மற்றும் தொடர்புடைய மாதிரிகளின் மேம்பாட்டில் ஆர்வமுள்ள அனைத்து UAE- அடிப்படையிலான பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு உள்ளூர் கல்வித்துறை வகை கிடைக்கிறது.

ஏற்கனவே, நடந்த முதல் இரண்டு பதிப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ள மூன்றாவது பதிப்பானது, செல்ஃப் டிரைவிங் டிரான்ஸ்போர்ட்டில் துபாயின் நிலையை மேம்படுத்துவதற்கான RTA இன் முயற்சிகளை நிறைவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதாவது, 2030 ஆம் ஆண்டுக்குள் துபாயில் மொத்த போக்குவரத்து பயணங்களில் 25% செல்ஃப் டிரைவிங் முறையைப் பயன்படுத்தும் பயணங்களாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!