அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் ஐடி காலாவதியானால் மொபைல் லைன் துண்டிக்கப்படுமா..?? டெலிகாம் நிறுவனங்கள் செய்வது என்ன….??

உங்கள் எமிரேட்ஸ் ஐடி காலாவதியாகப் போகிறதா? அல்லது புதுப்பிக்கப்பட்ட ஐடிக்காக நீங்கள் இன்னும் காத்துக்கொண்டிருகிறீர்களா? இந்த சமயத்தில், உங்கள் டெலிகாம் வழங்குநரிடமிருந்து ஐடியைப் புதுப்பிக்கவும் அல்லது உங்கள் ஃபோன் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அடிக்கடி மெஸ்சேஜ்களைப் பெறுவீர்கள்.

இவ்வாறு உங்களது எமிரேட்ஸ் ஐடியை சரியான நேரத்தில் புதுப்பிக்க முடியாமல் போனதாலோ அல்லது புதுப்பிக்கப்பட்ட ஐடிக்காக நீங்கள் இன்னும் காத்துக்கொண்டிருப்பதாலோ உங்களின் தொலைத்தொடர்பு லைன் துண்டிக்கப்படும் என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் ஐடி காலாவதியானப் பிறகும் அவற்றைப் புதுப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்குவதாக அமீரகத்தின் டெலிகாம் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்:

etisalat by e&:

etisalat by e& அதன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை காலமாக இரண்டு மாதங்களை வழங்குகிறது. ஆகவே, ஐடியின் காலாவதி தேதியைத் தாண்டிய பிறகு, இந்த இரண்டு மாதங்களில் etisalat by e& இல் பதிவு விவரங்களை புதுப்பிக்க வாடிக்கையாளர் ஒரு நினைவூட்டல் SMSஐப் பெறுவார்.

இந்த இரண்டு மாத சலுகைக் காலத்தையும் நீங்கள் தவறவிடுகிறீர்கள் என்றால், உங்கள் மொபைல் லைன் துண்டிக்கப்படும். அப்படியானால், உங்கள் பதிவை புதுப்பிக்க நீங்கள் etisalat by e& ஸ்டோரைப் பார்வையிட வேண்டும் அல்லது அதன் ஆப்-ஐப் பயன்படுத்த வேண்டும்.

du:

du நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எமிரேட்ஸ் ஐடி விவரங்களைப் புதுப்பிக்க 90 நாட்கள் சலுகைக் காலத்தைப் பெறலாம். மேலும், du வெளியிட்ட அறிக்கையின் படி, ஐடி காலாவதியாகும் 30 நாட்களுக்கு முன்போ அல்லது காலாவதியாகும் 90 நாட்களுக்குப் பிறகோ புதுப்பிக்கலாம். ஆக மொத்தம், உங்கள் ஐடியை புதுப்பிக்கும் செயல்முறையை முடிக்க 120 நாட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ஆகவே, இந்த சலுகைக் காலங்களில் UAE PASS- ஐ பயன்படுத்தி du ஆப் மற்றும் du ஸ்டோர்களில் உள்ள செல்ஃப்-சர்வீஸ் கியோஸ்க்குகளில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், இந்த சலுகைக் காலத்திற்குள் புதுப்பிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை du ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி, எமிரேட்ஸ் ஐடி காலாவதியான 60 நாட்களுக்குப் பிறகு, அவுட்கோயிங் சேவைகள் துண்டிக்கப்படும். 90 நாட்களுக்குப் பிறகு, அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் சேவைகள் இரண்டும் துண்டிக்கப்படும்.

அதேசமயம், உங்கள் ஐடியின் காலாவதி தேதியில் இருந்து 60 நாட்களுக்குப் பிறகு ஐடியை கணினியில் புதுப்பித்து, உங்கள் மொபைலின் வெளிச்செல்லும் சேவைகள் மட்டும் துண்டிக்கப்பட்டிருந்தால், பின்வரும் வழிகளில் du சிஸ்டத்தில் உங்கள் Emirates ஐடியைப் புதுப்பிக்கலாம்:

  1. ‘du’ ஆப்ஸ்
  2. செல்ஃப்-சர்வீஸ் கியோஸ்க்
  3. du ஸ்டோர்.

நீங்கள் 90 நாள் சலுகைக் காலத்தைப் பயன்படுத்தாமல் தவறவிடும் போது, உங்கள் லைன் முற்றிலும் துண்டிக்கப்படும். அப்போது, நீங்கள் du ஸ்டோரை அணுக நேரும். அங்கு, நீங்கள் புதிய எமிரேட்ஸ் ஐடியைச் சமர்ப்பிக்கலாம், மேலும், உங்கள் முந்தைய மொபைல்எண்ணை புதிய சிம்மில் வைத்திருக்கலாம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, லைன் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு வாடிக்கையாளர் தனது புதிய எமிரேட்ஸ் ஐடியை du க்கு பதிவு செய்தாலும், சில நிமிடங்களிலேயே லைன் மீண்டும் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TDRA) விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளன என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!