அமீரக செய்திகள்

உடலில் உள்ள நீரை உறிஞ்சும் உச்ச நேர வெப்பம்!! – எப்போதும் ஹைட்ரேஷனாக இருக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க….

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வெப்ப நோய்களின் அபாயங்களைத் தவிர்க்க மக்கள் எப்போதும் நீரேற்றமாக (hydration) இருப்பது முக்கியம். இடைவிடாத வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் விரைவாக உடலில் நீரிழப்பை(dehydration) ஏற்படுத்தும். மேலும், இது உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும்.

ஹைட்ரேஷன் என்பது தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல, உடலில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவங்களின் சமநிலையை பராமரிப்பதும் ஆகும். ஆகவே, கொளுத்தும் வெயில் காலங்களில் உங்களை எப்போதும் ஹைட்ரேஷனாக வைத்திருக்க 9 குறிப்புகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

>> ஒவ்வொரு நாளையும் நீருடன் தொடங்குங்கள்: நீண்ட நேர தூக்கத்திற்குப் பிறகு, உங்கள் காலையை ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் தொடங்குவது நல்லது. வெறும் நீரை குடிக்க விருப்பமில்லை என்றால், தண்ணீரில் வெள்ளரி, புதினா அல்லது பெர்ரி துண்டுகளை ஊறவைத்து சுவைத்து குடிக்கலாம்.

>> தண்ணீர் பாட்டில் எப்போதும் கொண்டு செல்லுங்கள்: உங்களுடன் எப்போதும் ஒரு ரீ-யூசபிள் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள். அதனால் நாள் முழுவதும் எளிதாக உங்களை ஹைட்ரேட் செய்து கொள்ள முடியும். தண்ணீர் பாட்டிலை உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருப்பது எல்லா நேரமும் உங்களை ஹைட்ரேஷனாக வைத்திருக்க நினைவூட்டும்.

>> ஹைட்ரேஷன் ரிமைண்டரை ஆன் செய்யுங்கள்: பரபரப்பான நாளில் போதுமான தண்ணீர் குடிக்க மறந்து விடுவோம். ஆகையால், உங்கள் மொபைலில் ரிமைண்டரை அமைப்பதன் மூலம் அவ்வப்போது மறக்காமல் தண்ணீர் குடிக்கலாம்.

>> எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களை பருகுங்கள்: உடலில் சமநிலையைப் பராமரிக்க தண்ணீரைத் தவிர, இளநீர் அல்லது இயற்கை பழச்சாறுகள் போன்ற எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களைத் தேர்ந்தெடுத்துப் பருகுங்கள். இவை நீங்கள் வியர்வை வழியாக இழந்த அத்தியாவசிய தாதுக்களை நிரப்ப உதவுவதுடன் உடலை ஹைட்ரேஷனாகவும் வைத்திருக்கும்.

>> காஃபின் மற்றும் சர்க்கரை பானங்களை குறைந்த அளவில் எடுக்கவும்: அடிக்கடி காபி, டீ மற்றும் சோடாக்கள் போன்ற காஃபின் மற்றும் சர்க்கரை பானங்களை எடுத்துக் கொள்வது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இவற்றை நீங்கள் சிறிதளவு எடுத்தாலும், போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வதன் மூலம் அவற்றை சமநிலைப்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

>> சிறுநீரின் நிறத்தை கண்காணிக்கவும்: உங்கள் உடலை நீங்கள் எவ்வளவு ஹைட்ரேஷனாக வைத்திருக்கிறீர்கள் என்பதை மதிப்பிடுவதற்கான ஒரு எளிய வழி, உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கவனிப்பதாகும். உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீங்கள் சரியான ஹைட்ரேஷன் நிலையில் இருப்பதையும், அதே சமயம் அடர் மஞ்சள் அல்லது அம்பர் நிறமாக இருந்தால் நீரிழப்பு ஏற்பட்டிருப்பதையும் உறுதி செய்யலாம்.

>> உடற்பயிற்சிக்கு முன், பின் தண்ணீர் குடிக்கவும்: வெப்பம் தீவிரமாக இருக்கும் காலங்களில், உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு விரைவான நீரிழப்புக்கு வழிவகுக்கும். ஆகவே, உடற்பயிற்சி செய்வதற்கு முன், போது மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு தண்ணீர் குடிக்க முயற்சிக்கவும்.

>> நீர்ச்சத்து நிறைந்த உணவுடன் ஹைட்ரேஷன்: பொதுவாக, கோடைகாலங்களில் தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு மற்றும் கீரை போன்ற நீர் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இவை உங்களுக்கு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்குகின்றன.

>> சுட்டெரிக்கும் சூரியனின் உச்ச நேரங்களில் நேரடியாக படுவதைத் தவிர்க்கவும்: கடுமையான கோடைகாலங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேரடியாக சூரிய ஒளியில் படுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். மேலும், அதிகாலை, மாலை மற்றும் இரவு போன்ற நாளின் குளிர்ச்சியான நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!