வளைகுடா செய்திகள்

ஓமானில் ஏற்பட்ட வெள்ளம்: வாகனம் அடித்துச் சென்றதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..!!

ஓமானில் சமீபத்தில் பெய்து வந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்கில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரு குழந்தை உட்பட ஒரு எமிராட்டி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிற்பகுதியில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது என்றும், காணாமல் போன இரண்டு எமிரேட்டியர்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குக்குப் பிறகு இறந்த மூவரும் அல் அய்னில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஓமானின் குடிமைத் தற்காப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் ட்விட்டரில் “வார இறுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்த காஃபி பள்ளத்தாக்கில் ஏழு பேருடன் இரண்டு வாகனங்கள் சிக்கிக்கொண்டன. உள்ளூர் மற்றும் அதிகாரிகள் நான்கு பேரைக் காப்பாற்ற முடிந்தது, மேலும் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டனர்”.

“மீட்கப்பட்டவர்கள் பல காயங்களுக்கு உள்ளாகினர். காணாமல் போன எமிராட்டியர்களுக்காக பல குழுக்கள் பள்ளத்தாக்கைச் சுற்றிலும் தேடுதல் நடவடிக்கைகளில் விமான மற்றும் தரை வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இறுதியில் அவர்கள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!