புதிய நுழைவு அனுமதி முறையை அறிவித்துள்ள துபாய்..!! GCC குடியிருப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகளும் நிபந்தனைகளும்…

துபாயில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA), GCC குடியிருப்பாளர்களுக்கான புதிய நுழைவு அனுமதி முறையை அறிவித்துள்ளது. மேலும், இந்த சேவை வாரத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களும் திறந்திருக்கும் மற்றும் விண்ணப்பத்தைச் செயலாக்க குறைந்தபட்சம் 48 மணிநேரம் நேரம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து GDRFAஇன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. GDRFA வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “GCC நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கு, அமீரகத்தின் ஒரு சுமூகமான நுழைவு செயல்முறையை உறுதி செய்வதற்காகவும், நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் மற்றும் முன்னுரிமை ஆன்லைன் நுழைவு அனுமதியை (prior online entry permit) வழங்கவும் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய நுழைவு அனுமதிக்கு தேவையான ஆவணங்கள்:
- அசல் பாஸ்போர்ட்
- அமீரகத்திற்கு வந்தவுடன், GCC நாட்டினால் வழங்கப்பட்ட அசல் குடியிருப்பு அனுமதியை சமர்ப்பிக்க வேண்டும்.
- சிவில் அல்லது தொழிலாளர் அட்டை
விண்ணப்பிக்கும் படிகள்:
நீங்கள் இந்த என்ட்ரி பெர்மிட்டை GDRFA இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
- முதலில் உங்களின் UAE PASS அல்லது user name மூலம் ஸ்மார்ட் சேவைகளில் உள்நுழையவும்.
- சேவையைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பத்தை நிரப்பவும்.
- கட்டணம் செலுத்தவும்.
- இதற்கு VAT வரி 5% சேர்த்து 250 திர்ஹம்ஸ் செலவாகும்.
GCC குடியிருப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
- வெளிநாட்டவர் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- பயணி நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் எந்தத் தடைகளும் இருக்கக்கூடாது.
- வேலை அல்லது ரெசிடென்ஸ் கார்டில் தொழிலைச் சேர்த்திருக்க வேண்டும்.