வளைகுடா செய்திகள்

இனி வெளிநாட்டவர்கள் தங்களின் அபராதம் செலுத்தாமல் சொந்த ஊருக்கு செல்ல முடியாது … புது நடைமுறையை அமல்படுத்திய குவைத் அரசு!

குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள், குவைத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன் நிலுவையில் உள்ள அபராதங்களை முறையாக செலுத்திய பின்பே வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வெளிநாட்டவர்கள் குவைத்தில் இருந்து வெளியேறும் முன் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதி மீறல்களுக்கான கட்டணங்களை முறையாக செலுத்த வேண்டும் என புலம்பெயர்ந்தோருக்கான உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது, அமைச்சகத்துக்கு செலுத்த வேண்டிய கடன்களை முறையாக வசூலிப்பதை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது என பொதுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளும் சட்டமானது ஏற்கனவே வெளிநாட்டினர் ரெசிடென்ஸி சட்டத்தின் ஆணை எண். (17/1959) மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான ஆணை-சட்டம் எண். (67/1976) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

எனவே, எந்த ஒரு வெளிநாட்டவரும், தம் சொந்த நாட்டிற்கு புறப்படுவதற்கு முன் அவர்களது சுயவிவரத்துடன் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து மீறல்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், இதற்காக பிரத்தியேகமான மின்னணு போர்டல் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

எனவே,மின்னணு போர்ட்டல் மூலமாகவோ அல்லது பொதுப் போக்குவரத்துத் துறையுடன் இணைக்கப்பட்ட நியமிக்கப்பட்ட துறைகளுக்குச் செல்வதன் மூலமாகவோ தனிநபர்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்த அனுமதிக்கும் வகையில், அமைச்சகம் இந்த செயல்முறைக்கு வசதியான சேனல்களை நிறுவியுள்ளது. இந்த துறைகள் பல்வேறு கவர்னரேட்டுகளிலும், குவைத் சர்வதேச விமான நிலையம் உட்பட தரை மற்றும் கடல் துறைமுகங்களுக்குள் அமைந்துள்ள அலுவலகங்களிலும் வெளிநாட்டவர்கள் பணம் செலுத்துவதற்கு வசதியாக அமைந்துள்ளன.

மேலும், இந்த நடைமுறையானது சனிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2023 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்ட நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம், நாட்டின் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பினை நிலை நிறுத்தலாம் எனவும், நாட்டின் நல்வாழ்வினை கருத்தில் கொண்டு வெளிநாட்டவர்கள் இந்த நடைமுறையினை தவறாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!