வளைகுடா செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான மருத்துவ சேவை கட்டணத்தினை உயர்த்தவுள்ள குவைத் அரசு…

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ சேவைகளுக்கான கட்டணத்தை மதிப்பாய்வு செய்து அதனை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குவைத்தில் தற்போதைய மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வெளிவந்த சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் மூலப்பொருட்களின் குறைபாடுகள் போன்ற காரணங்களால் மருந்து பற்றாக்குறை இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதன்மை மருந்துகள் மற்றும் அதற்கான மாற்று மருந்துகளில் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகளின் மருந்து தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க ஆலோசித்து வருகின்றது.

எனவே, சர்வதேச சூழ்நிலைகளில் இருந்து சாத்தியமான குறுக்கீடுகளை குறைத்து, பல்வகை ஆதாரங்கள் மூலம் மருந்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. மேலும், மருந்து வீணாவதைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

எனவே, மருந்து தட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு வெளிநாட்டவர்களுக்கான தற்போதைய சுகாதார சேவைகளுக்கான கட்டணங்களை மதிப்பாய்வு செய்து கட்டண உயர்வை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களுக்கான உடல்நல காப்பீடு செலவுகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.  எனவே, “Daman” மருத்துவமனைகளுக்கான செயல்பாடுகளைத் தொடங்குவதற்கும், பார்வையாளர்களுக்கான உடல்நலக் காப்பீட்டுச் சட்டத்தை அமல்படுத்துவதற்கும் ஆலோசித்து வருகின்றது.

எனவே, இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் வெளிநாட்டவர்களுக்கான மருத்துவ சேவைகளுக்கான கட்டணம் மற்றும் விசிட்டர் விசாவில் வருபவர்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் போன்றவை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!