வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியா: வீட்டு வேலை செய்பவர்கள் இனி எளிதில் ஒரு முதலாளியிடம் இருந்து மற்றொரு முதலாளிக்கு ஸ்பான்சர்ஷிப்பை மாற்றும் வசதி…Musaned தளம் மூலம் சாத்தியமாக்கிய அரசு!!

சவுதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD), வீட்டு பணியாளர்கள் ஒரு முதலாளியிடம் இருந்து மற்றொரு முதலாளிடம் வேலைக்கு மாறும் பொழுது அவர்களின் ஸ்பான்சர்ஷிப் மாற்றத்தை அமைச்சகத்தின் Musaned தளம் மூலம் தனிப்பட்ட முதலாளிகளுக்கு இடையில் மாற்றுவது சாத்தியம் என்று அறிவித்திருக்கின்றது. இந்த புதிய ஆன்லைன் சேவை ஆகஸ்ட் 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சேவையானது, வீட்டுப் பணியாளர்களின் சேவைகளை எளிதாக மின்னணு வழிமுறைகளுடன் ஆட்சேர்ப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைககளுக்கு உட்பட்டு மாற்ற அனுமதிக்கிறது. பணியாளரின் தற்போதைய முதலாளி, வீட்டு வேலை செய்பவர் மற்றும் புதிய முதலாளி போன்ற ஒப்பந்த உறவில் ஈடுபட்டுள்ள மூன்று தரப்பினரின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த பரிமாற்ற செயல்முறை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நம்பகமான மின்னணு கட்டண முறைகள் மூலம் பணம் செலுத்தும் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அது அமைச்சகம் நிர்ணயித்த விலை உச்சவரம்புக்கு இணங்க கண்டிப்பாக இருக்கும் என்றும் சவூதி பிரஸ் ஏஜென்சி நடத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது, பணியிட மாறுதலின் போது, ​​முதலாளி மற்றும் வீட்டுப் பணியாளரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என்றும், இரு தரப்பினருக்கும் உரிமைகளை பாதுகாக்கும் உட்பிரிவுகளைக் கொண்ட ஒரு நிலையான கால வேலை ஒப்பந்தத்தை வழங்குவதற்கு எளிதாக இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் உள்நாட்டு தொழிலாளர் துறையை மேம்படுத்துதல், ஆட்சேர்ப்பின் தரத்தை உயர்த்துதல், உரிமைகளைப் பாதுகாத்தல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இடையேயான ஒப்பந்த உறவை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த புதிய சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர் மற்றும் முதலாளியின் உரிமைகள் மற்றும் கடமைகளை விளக்குவதற்கும், வீட்டுச் சேவைகள் மற்றும் வீட்டு வேலைத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளமாக Musaned தளத்தை அமைச்சகம் நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!