வளைகுடா செய்திகள்

குவைத்தில் நுழைவதற்கு பயோமெட்ரிக் கைரேகை கட்டாயம்!! விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் செயல்முறை….

GCC குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் குவைத்தில் நுழைவதற்கு முன் கட்டாயமாக பயோமெட்ரிக் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்று குவைத் போர்ட்ஸ் அத்தாரிட்டி (Kuwait Ports Authority) தெரிவித்துள்ளது.

இருப்பினும், விமான நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தால்,  சுற்றுலாவாசிகள் கட்டாய கைரேகை செயல்முறை இன்றி பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் மற்றும் வருகைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து, சில மணிநேரங்களில் சுற்றுலாவாசிகளுக்கான கைரேகை செயல்முறையை முடிக்க முடியும் என்றால், அவர்கள் சிறிது நேரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வெளிநாட்டிலிருந்து வரும் குவைத் நாட்டவர்களுக்கு இந்த நடைமுறை கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, நாட்டிற்கு வெளியே பயணம் செய்யும் குவைத் நாட்டவர்கள் கைரேகையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்கள் திரும்பி வரும்போது பயோமெட்ரிக் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் குவைத்தில் வசிப்பவர்களின் பயோமெட்ரிக்கை பதிவு செய்ய குவைத்தில் உள்ள 5 மால்களில் அதற்குண்டான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!