அமீரக சட்டங்கள்

UAE: லைசென்ஸ் இல்லாமல் மருத்துவ தொழிலில் ஈடுபட்டால் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம்..!! ஒரு மருத்துவரை வைத்து கிளினிக் நடத்தக்கூடாது..!! புதிய சட்டங்களை அறிவித்துள்ள அரசு…

அமீரகத்தில் முறையான லைசென்ஸ் இல்லாமல் தொழில் செய்யும் அல்லது போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் சுகாதாரத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் போன்ற சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு, புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தொழில் விதிமுறைகளுக்கான சட்டங்களின் கீழ், சிறைத்தண்டனையுடன் 50,000 முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதை அமீரக அரசாங்கம் எச்சரித்துள்ளது.

அத்துடன் கிளினிக் போன்ற ஒரு சுகாதார மையமானது தனி நபரால் மட்டுமே இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அதை மூட உத்தரவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மருத்துவ நிபுணர்கள் ஒரு குறிப்பிட்ட மருந்தகத்தில் இருந்து மருந்துகளை வாங்கும்படி நோயாளிகளிகளுக்கு பரிந்துரைப்பது, மருந்துகளை விற்பது அல்லது விளம்பரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடைசெய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய விதிமுறைகள் நர்சிங், ஆய்வகங்கள், மருத்துவ இயற்பியல், செயல்பாட்டு தெரபி, பிசியோதெரபி, அழகியல், அனேஸ்தீசியா, ஆடியாலாஜி மற்றும் ரேடியாலஜி போன்ற பல சுகாதாரத் தொழில்களுக்கு மருத்துவர்கள் அல்லாத சுகாதார ஊழியர்களின் தொழில்முறை நடத்தைக்கான வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றன.

உரிமத் தேவைகள்:

சுகாதார ஆணையத்திடம் இருந்து உரிமம் பெறாமல் எந்தவொரு தனிநபரும் மருத்துவ தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்படக்கூடாது. எனவே, சுகாதாரப் பணியாளர்கள் தகுதியான உரிமத்தைப் பெற பின்வரும் இந்தச் சட்டத்தின் விதிகள், அதன் நிர்வாக விதிமுறைகள் மற்றும் தொடர்புடைய முடிவுகளுடன் இணக்கமாக இருக்கும் உரிமத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

  • தனிநபர் அமீரகத்தில் அவர்கள் பயிற்சி செய்ய விரும்பும் குறிப்பிட்ட சுகாதாரத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்விப் பட்டம் அல்லது தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • அவர்கள் நல்ல நடத்தை மற்றும் குணத்தை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் அவர்களின் தொழில் கடமைகளைச் செய்ய மருத்துவ ரீதியாக தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • அமைச்சர் கவுன்சிலின் தீர்மானத்தின்படி, சுகாதாரப் பயிற்சியாளர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான தரநிலைகளை அவர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தேசிய மருத்துவ பதிவுசட்டத்தின்படி, நாட்டில் உரிமம் பெற்ற சுகாதார நிபுணர்களுக்காக தேசிய மருத்துவப் பதிவேடு அமைக்கப்படும். எனவே, சுகாதாரத் தொழிலாளர்கள் தேசிய பதிவேடுகளுடன் இணைக்கப்பட்ட தங்கள் சொந்த பதிவேடுகளை உருவாக்க வேண்டும்.

விதிமீறல்களும் அபராதங்களும்:

சுகாதாரத் தொழிலை ஒழுங்குபடுத்தும் அமீரகத்தின் புதிய சுகாதாரத் தொழில் சட்டங்கள், பின்வரும் விதிமீறல்களுக்கு 1 மில்லியன் திர்ஹம் வரையிலான அபராதம் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது:

>> அமீரக அரசு அங்கீகரித்துள்ள முறையான உரிமம் இல்லாமல் பயிற்சி செய்யும் ஒரு சுகாதார தொழிலாளருக்கு 10,000 முதல் 100,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும், ஆனால் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய அவரை உரிமத்தைப் பெற அனுமதிக்கும்.

>> சட்ட விதிகளை மீறி நடத்தப்படும் ஒரு சுகாதார மையத்தின் இயக்குனர் அல்லது மேலாளருக்கு 1,000 முதல் 500,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் மற்றும் அவரது மருத்துவ உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

>> அதேபோல், சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படும் சுகாதார மையம் கண்டுபிடிக்கப்பட்டால், 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம். மீறலைப் பொறுத்து, அது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடப்படும்.

கால்நடை சுகாதார மையங்கள்:

>> அமீரகத்தின் புதிய சட்டத் திருத்தத்தின் படி, எமிராட்டி கால்நடை மருத்துவர்கள் மற்றும் சமீபத்திய பட்டதாரிகள் தொழிலைத் தொடர உரிமம் பெறுவதற்குத் தேவையான நிபுணத்துவ காலத்தை (duration of expertise) அப்டேட் செய்திருக்க வேண்டும். மேலும், கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவ நிபுணர்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

>> அதேவேளை, நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், வெளிநாட்டு தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் கால்நடை மருத்துவ வசதிகளை நிறுவவும் மற்றும் சொந்தமாக வைத்திருக்கவும் புதிய சட்டங்கள் அனுமதிக்கிறது.

கால்நடை மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான தேசிய பதிவேட்டை நாட்டில் நடைமுறைப்படுத்த காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!