அமீரக செய்திகள்

அமீரக வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. செப்டம்பர் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இரண்டாவது மாதம் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செப்டம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அமீரக எரிபொருள் விலைக் குழு (The UAE fuel price committee) அறிவித்துள்ளது.

  • செப்டம்பர் 1 முதல் சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.41 திர்ஹம்ஸாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் சூப்பர் 98 பெட்ரோல் லிட்டருக்கு 4.03 திர்ஹம்ஸாக இருந்தது.
  • ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.30 திர்ஹம்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆகஸ்டில் 3.92 திர்ஹம்ஸாக இருந்தது.
  • இ–பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.22 திர்ஹம்ஸாக குறைந்துள்ளது. ஆக்ஸ்ட் மாதம் இ–பிளஸ் 91 பெட்ரோல் லிட்டருக்கு 3.84 திர்ஹம்ஸாக இருந்தது.
  • டீசல் விலை லிட்டருக்கு 3.87 திர்ஹம்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆகஸ்டில் 4.14 திர்ஹம்ஸாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் பற்றிய கவலைகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக எண்ணெய் விலைகள் கீழ்நோக்கிச் செல்கின்றன.

2015ல் ஐக்கிய அரபு அமீரகம் பல கட்டுப்பாடுகளை நீக்கியதையடுத்து, ஜூலை 2022ல் லிட்டருக்கு 4.63 திர்ஹம்ஸ் என்ற உச்சத்தை எட்டிது, பின்னர் சில்லறை எரிபொருள் விலைகள் முதல் முறையாக ஜூன் 2022ல் லிட்டருக்கு 4 திர்ஹம்ஸை தாண்டியது.

ஆகஸ்ட் 29 நிலவரப்படி, நார்வே போன்ற பல எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளை விட ஐக்கிய அரபு அமீரகத்தின் சில்லறை எரிபொருள் விலைகள் மலிவாக இருந்தன என்று globalpetrolprices.com தெரிவித்துள்ளது. பெட்ரோலின் உலகளாவிய விலை லிட்டருக்கு சராசரியாக 4.98 என்று தரவுகாள் மூலம் அறியப்படுகிறது, இது அமீரகத்தில் உள்ள எரிபொருள் விலையை விட மிக அதிகமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!