அமீரக செய்திகள்

அமீரகவாசிகளே.. இனி உங்கள் பழைய துணியை கொடுத்து பணம் பெறலாம்.. எப்படினு தெரியுமா..??

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் தங்களின் பழைய ஆடைகளை இனிமேல் குப்பையில் வீசுவதற்கு பதிலாக அதனை பணமாகவோ அல்லது கூப்பனாகவோ மாற்றிக் கொள்ளலாம். ஆம், அமீரகத்தில் ஆடைகளை மறுசுழற்சி செய்வதற்கு புதிதாக தொடங்கப்பட்ட கிஸ்வா UAE சேவையானது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும் விதமாக பயன்படுத்திய ஆடைகளுக்கு பணம் கொடுப்பது மட்டுமில்லாமல் அதனை இலவசமாக எடுத்துச் செல்வதற்கான சலுகைகளையும் வழங்குகிறது.

கிஸ்வா UAE ன் செய்தித் தொடர்பாளர் செஹாம் ஆலம் கூறுகையில், “நாங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் ஆடைகளை வாங்கி மறுசுழற்சிக்கு அனுப்புகிறோம், அதே நேரத்தில் கழிவு மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதற்காக அவர்களுக்கு பணம் அல்லது கூப்பன் அளிக்கிறோம்” என்று விளக்கியுள்ளார்.

மேலும் பழைய உடைகள், காலணிகள், பேக், படுக்கை விரிப்புகள் மற்றும் பொம்மைகள் ஆகிய எதுவாக இருந்தாலும் அதனை மறுசுழற்சிக்கு வழங்கலாம். அவர்கள் வழங்கும் நன்கொடைகள் எடை போடப்பட்டு ஒவ்வொரு கிலோவுக்கும் பணம் அல்லது கூப்பன்கள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பாளர்களிடமிருந்து பெறப்படும் துணிகளில், நல்ல நிலையில் உள்ள ஆடைகள் வெளிநாடுகளில் மறுவிற்பனை செய்யப்படுகின்றன, அதே நேரத்தில் சேதமடைந்த ஆடைகள் வரிசைப்படுத்தப்பட்டு ஃபர்னிச்சர் அல்லது கர்டைன்ஸ் போன்ற பிற பயன்பாடுகளுக்காக மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்றும் அவர் விளக்கியுள்ளார்.

தங்களின் பழைய ஆடைகளை கொடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் www.kiswauae.com என்ற இணையதளத்தில் பிக்-அப் அப்பாயிண்ட்மெண்ட் செய்யலாம் அல்லது 0569708000 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும், கிஸ்வா பிரதிநிதிகள் 24 மணி நேரத்திற்குள் உங்கள் வீட்டு வாசலில் இருந்து அவற்றை பெற்றுக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் கடந்த நான்கு மாதங்களில், கிஸ்வா UAE ஆனது 424,100 ஆடைகளை மறுசுழற்சி செய்ய உதவியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமீரகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து நம்பமுடியாத தேவையை நாங்கள் கண்டுள்ளோம், இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மக்களின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அவர்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறிய அவர், சேகரிக்கப்பட்ட ஆடைகளில் 10 சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்துளளார்.

அமீராகத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள கிஸ்வா அமைப்பானது, கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பாகிஸ்தான் மற்றும் ஜிசிசி நாடுகளில் ஆடை மறுசுழற்சி சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!