அமீரக செய்திகள்
துபாயில் நாளை பொது விடுமுறை: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ள RTA..!!

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 29 (வெள்ளிக்கிழமை) அன்று அமீரகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, துபாய் எமிரேட் முழுவதும் பொது பார்க்கிங் இலவசம் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, மீண்டும் சனிக்கிழமை (செப்டம்பர் 30) முதல் பார்க்கிங் கட்டணம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் RTA தெரிவித்துள்ளது. எனினும் இந்த இலவச பார்க்கிங் பல்நிலை முனையங்களுக்கு (multi-level terminals) பொருந்தாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேபோல், அபுதாபி எமிரேட்டிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை முழுவதும் இலவச பார்க்கிங் மற்றும் டோல் கேட் கட்டணத்தில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.