அமீரக செய்திகள்
அமீரகத்தில் தணியும் வெப்பம்..!! ஆங்காங்கே தூறல் பெய்ததாக வானிலை மையம் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், படிப்படியாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை குடியிருப்பாளர்களை தீண்டிச் செல்கிறது. அந்த வகையில், இன்று நாட்டின் சில பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்தது.
அவ்வாறு நாட்டில் ஆங்காங்கே பெய்த தூறல் மழையின் அழகியக் காட்சிகளை குடியிருப்பாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
ஃபுஜைரா மலைப்பகுதியிலும் அதேபோல் நேற்றிரவு, கொர்ஃபக்கன் கிழக்கு பகுதியிலும் தூறல் பெய்துள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
NCM இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம், குறிப்பாக, அபுதாபியில் 38ºC வரையிலும், துபாயில் 39ºC வரையிலும் வெப்பநிலை உயரும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.