அமீரக செய்திகள்

அமீரகத்தில் அக்டோபர் மாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!! எரிபொருள் விலை கமிட்டி அறிவிப்பு..!!

அமீரக எரிபொருள் விலை கமிட்டி ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையை நிர்ணயித்து வருகிறது. அந்தவகையில், இப்போது அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று வெளியிட்டுள்ளது.

புதிய விலைகள் நாளை முதல் (அக்டோபர் 1) அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலையைப் பின்வருமாறு பார்க்கலாம்:

  • Super 98 பெட்ரோல் லிட்டருக்கு 3.44 திர்ஹம்களாக உயர்ந்துள்ளது, இது செப்டம்பரில் 3.42 திர்ஹம்களாக இருந்தது.
  • ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.33 திர்ஹம்களாக அதிகரித்துள்ளது, செப்டம்பரில் 3.31 திர்ஹம்களுக்கு விற்பனையாகியது.
  • இ-பிளஸ் 91 பெட்ரோல் லிட்டருக்கு 3.26 திர்ஹம்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கடந்த மாதம் 3.23 திர்ஹம்களாக இருந்தது.
  • செப்டம்பரில் 3.40 திர்ஹம்களாக இருந்த டீசலின் விலை, அக்டோபர் மாதம் லிட்டருக்கு 3.57 திர்ஹம்களாக அதிஎரித்துள்ளது.

நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ஏற்ற இறக்கத்தைக் கண்ட எரிபொருட்களின் விலைப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

மாதங்கள் 2023 சூப்பர் 98 ஸ்பெஷல் 95 இ-பிளஸ் 91
ஜனவரி Dh2.78 Dh2.67 Dh2.59
பிப்ரவரி Dh3.05 Dh2.93 Dh2.86
மார்ச் Dh3.09 Dh2.97 Dh2.90
ஏப்ரல் Dh3.01 Dh2.90 Dh2.82
மே Dh3.16 Dh3.05 Dh2.97
ஜூன் Dh2.95 Dh2.84 Dh2.76
ஜூலை Dh3 Dh2.89 Dh2.81
ஆகஸ்ட் Dh3.14 Dh3.02 Dh2.95
செப்டம்பர் Dh3.42 Dh3.31 Dh3.23

Related Articles

Back to top button
error: Content is protected !!