மூன்று மாத விசிட் விசாவை மீண்டும் நிறுத்திய அமீரகம்..!!! ICP தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா மற்றும் விசிட்டில் செல்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் அமீரகத்திற்கு வரும் நபர்களுக்கு இனி மூன்று மாத விசிட் விசாக்கள் கிடைக்காது என்ற தகவலானது தற்பொழுது கிடைத்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவலின் போது, ஐக்கிய அரபு அமீரகம் மூன்று மாத விசிட் விசாவை நிறுத்தி வைத்திருந்தது. அதற்கு பதிலாக 60 நாட்கள் விசா அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் கடந்த மே மாதம் மூன்று மாத விசிட் விசா எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது மூன்று மாத விசிட் விசாக்களானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விசா நிறுத்தம் குறித்து அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) கால் சென்டர் நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில் 90 நாட்களுக்கான விசிட் விசாக்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், 30 அல்லது 60 நாள் விசாவில் பயணிகள் நாட்டிற்குள் நுழையலாம் என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், துபாயில் முதல்-நிலை உறவினர்களைக் கொண்டவர்களுக்கு மட்டும் 90 நாள் நுழைவு அனுமதி வழங்கப்படுவதாக அமர் சென்டரின் கால் சென்டர் நிர்வாகி தெரிவித்துள்ளார். இதன் மூலம், துபாய் குடியிருப்பாளர்கள் தங்கள் பெற்றோர் உள்ளிட்ட முதல் நிலை உறவினர்களை மட்டும் மூன்று மாத விசாவில் அழைத்து வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த மூன்று மாத விசிட் விசாக்கள் நிறுத்தம் குறித்து பல டிராவல் ஏஜென்டுகளும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த தகவலை துபாயில் இயங்கி வரும் டிராவல் ஜோன் இன்டர்நேஷனல் டூரிஸம் நிறுவனத்தின் நிறுவனர் SKV ஷேக் நம்மிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 3 மாத விசிட் விசாவானது (leisure category) மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டதாகவும் தற்பொழுது விசா வழங்கக்கூடிய போர்டலில் 3 மாத விசிட் விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான விருப்பத்தேர்வு (option) காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பார்வையாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கும் நீண்ட காலம் தங்குவதற்கும் பல விருப்பங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
5 வருட மல்டிபிள்-என்ட்ரி விசா:
இந்த வகை விசா, செல்ஃப் ஸ்பான்சர்ஷிப் மூலம் பலமுறை அமீரகத்திற்குள் நுழைய பார்வையாளர்களை அனுமதிக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு வருகையின் போதும் 90 நாட்கள் வரை தங்கலாம். அதுமட்டுமில்லாமல், இந்த விசா வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் மேலும் 90 நாட்கள் நீட்டிக்க முடியும்.
இது வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அமீரகத்தில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீண்ட காலம் செலவிட உதவுகிறது. இந்த மல்டி என்ட்ரி விசாவுக்க்கு விண்ணப்பிக்கும் பயணிகள் குறிப்பாக, ஆறு மாத வங்கி அறிக்கை உட்பட விசா பெறுவதற்கு தேவையான ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கிரீன் விசா:
பின்வரும் மூன்று வகையினருக்கு கிரீன் விசா வழங்கப்படுகிறது:
- முதலீட்டாளர் அல்லது கூட்டாளர்
- திறமையான பணியாளர்
- சுய வேலைவாய்ப்பு.
ஆகவே, கிரீன் விசாவை பெற விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலமாகவோ, வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் அல்லது அமர் சேவை மையத்திலோ தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
முதலீட்டு வாய்ப்புகளுக்கான விசாவைத் தேடுதல் (சிங்கிள் என்ட்ரி):
இந்த விசா, அமீரகத்தில் வணிக வாய்ப்புகளைத் தேடவும், கூட்டாளர்கள் (partners) அல்லது வாடிக்கையாளர்களைக் கண்டறியவும் முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. இது 60, 90 மற்றும் 120 நாட்களுக்கு கிடைக்கும்.
இந்த நுழைவு அனுமதியும் ஸ்பான்சர் தேவையில்லாமல் விசாவைப் பெறுவதை செயல்படுத்துகிறது. இந்த விசாவிற்கு ICPயின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel