அமீரக செய்திகள்

UAE: வரும் வார இறுதியில் நடைபெறவிருக்கும் ‘Abu Dhabi Moments’ ஃபெஸ்டிவல்!! குடியிருப்பாளர்கள் இலவசமாக கலந்து கொள்வது எப்படி..??

அபுதாபியில் ‘Abu Dhabi Moments’ என்ற ஃபேமிலி-ஃபிரெண்ட்லியான நிகழ்வு இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. எமிரேட்டின் சமூக பங்களிப்பு ஆணையமான (Authority of Social Contribution) Ma’an ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பெஸ்டிவலில் நுழைவு இலவசம் என கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் வார இறுதியில் நடைபெற உள்ள இந்த ஃபெஸ்டிவலின் மூன்றாவது பதிப்பில், விளையாட்டு நடவடிக்கைகள், கலாச்சார மற்றும் கல்வி தொடர்பான ஒர்க் ஷாப்புகள் மற்றும் இ-கேம்கள் என பார்வையாளர்கள் குடும்பத்தோடு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

Ma’anஇன் கூற்றுப்படி, இது சமூகம் சார்ந்த நிகழ்வாகும், இது மக்களிடையே தொடர்புகளை வளர்க்கவும், பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், அபுதாபியில் உள்ள முழு சமூகத்திற்கும் பயனளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச ஃபெஸ்டிவலில் என்னென்ன உள்ளது, பங்கேற்பது எப்படி போன்ற விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்:

எப்போது நடைபெறுகிறது?

இந்த மெகா ஃபெஸ்டிவல் நவம்பர் 17 வெள்ளி முதல் நவம்பர் 19 ஞாயிறு வரை நடைபெறுகிறது.

நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை.

பதிவு செய்வது எப்படி?

இந்நிகழ்வு இலவசம் என்றாலும், நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வது எப்படி என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  1. முதலில் https://www.abudhabimoments.ae/  என்ற லிங்க் மூலம் இணையதளத்தில் நுழைந்து, மெனு டேப்பில் உள்ள ‘Register Now’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. அடுத்த படியாக, உங்களின் முழு பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, தேசியம் மற்றும் அபுதாபியில் நீங்கள் வசிக்கும் பகுதி போன்ற விபரங்களை உள்ளிடவும். உங்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் சேர்க்க உங்களுக்கு விருப்பம் உள்ளது.
  3. நிகழ்வில் உங்களுக்கு சிறப்பு உதவி தேவைப்பட்டால், இந்தச் சேவையைத் தேர்வுசெய்ய பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  4. இறுதியாக, ‘Register’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.

எல்லாம் முடிந்ததும்,  உங்கள் மின்னஞ்சலில் உறுதிப்படுத்தல் மற்றும் QR குறியீட்டைப் பெறுவீர்கள். நீங்கள் ‘Abu Dhabi Moments’ பெஸ்டிவலுக்கு வரும்போது ஸ்கிரீன்ஷாட் எடுத்து QR குறியீட்டை வழங்கவும்.

இடம்

‘Abu Dhabi Moments’ கலீஃபா நகரில் உள்ள கலீஃபா ஸ்கொயர் பகுதியில் நடத்தப்படும். நீங்கள் அங்கு செல்வதற்கு, E10 சாலையை (ஷேக் சையத் பின் சுல்தான் தெரு) எடுத்து, அல் பந்தர் ஸ்ட்ரீட்டை நோக்கி எக்ஸிட் வழியை எடுக்கவும். அடுத்து, அல் மிரீஃப் ஸ்ட்ரீட் மற்றும் கலீஃபா ஸ்கொயரின் திசைகளைப் பின்பற்றவும்.

ஃபெஸ்டிவலில் என்னென்ன பார்க்கலாம்?

‘Abu Dhabi Moments’ பெஸ்டிவலில் விளையாட்டு மற்றும் ஆரோக்கியம், கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்வுகள் இடம்பெறும்.

இந்த பெஸ்டிவலில் செஸ், கூடைப்பந்து போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும், இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆர்கேட் என நவீன விளையாட்டுகளும் இடம்பெறும். இவை தவிர, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஒர்க் ஷாப்புகளும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!